ஐபிஎல் போட்டிக்கு நடுவே இந்தியன் 2 அப்டேட்!.. கமல்ஹாசன், ஷங்கர் எங்க இருக்காங்கன்னு பாருங்க!

லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஜூலை மாதம் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஐபிஎல் போட்டியின் நடுவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு சென்று அந்த குழுவுடன் உரையாடி இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் அப்டேட்டை கொடுத்துள்ளனர்.

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி மற்றும் செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் தேசிய விருது வென்று மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 3 திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே .சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பிரம்மாண்டமாக இந்தியன் 2 படத்தின் விழா நடைபெறும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ஹாட் அப்டேட்களை இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...