யூடியூப் சேனல்கள் வியூஸுக்காக பார்த்த வேலை!.. எல்லாமே தப்பு.. பாடகி சுசித்ரா அந்தர் பல்டி!..

பாடகி சுசித்ரா பல யூடியூப் சேனலுக்கு அளித்து வந்த பேட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இனி எந்த யூடியூப் சேனலுக்கும் பேட்டி கொடுக்க போவதில்லை என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிள்ளார்.
ஆர்ஜேவாக தன் வாழ்க்கையை தொடங்கிய சுசித்ரா அதை தொடர்ந்து பின்னணி பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட நடிகையாக வலம் வந்தார்.

பாடகி சுசித்ரா வீடியோ:

மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். பின்னர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துக்கொண்டார். சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் வழக்கறிஞர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டதாக தெறிவித்தார். மேலும், ஒரு காலக்கட்டத்தில் சுச்சி லிக்ஸ் என சர்ச்சை கிளம்பியது அதன் பிறகு பல வாய்புகளை இழந்து சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

நடிகர் கார்த்திக் அலைபாயுதே படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து வானம் வசப்படும், கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி, பொய் சொல்லப் போறோம் போன்ற தமிழ் படங்களிலும், யுவா, சப்னோ கே தேஷ் மெயின் உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராகவும் திகழும் இவர் ஸ்டண்ட் அப் காமெடி ஷோக்களையும் நடத்தி வருகிறார்.

மேலும், சுசித்ரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன் முன்னாள் கணவரான கார்த்திக் குமார் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்றும் அது தனக்கு திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகளிலேயே தெரிய வந்தது. கார்த்திக்கும் தனுஷும் ஒரே அறையில் சேர்ந்து இருந்தார்கள். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற 12 வருடங்களானது என பேசியிருந்தார். சுச்சி லீக்ஸ் சர்சையிலும் கார்த்திக் குமார் தான் கோர்த்துவிட்டதாகவும், பயில்வான் ரங்கநாதன் ஒரு பத்திரிக்கையாளரே இல்லை அவர் ஆபாசப்பட ஏஜெண்ட் என கூறியிருந்தார். மேலும் இப்படி பலரையும் இழுத்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இனிமே பேட்டி கொடுக்க மாட்டேன்:

இந்நிலையில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்,அதில் மற்ற யூடியூப் சேனல்கள் என் பர்ஷனல் விஷயத்தை பற்றி பேசுவதில் ஆர்வமாக உள்ளனர். அதனால் அவர்களுக்கு வியூஸ் வருது, காசு வருது. ஆனால், தம்ப்னைல் மோசமாக போடுறாங்க. இதனால், இனி நான் எந்த யூடியூப் சேனலுக்கும் பேட்டி கொடுப்பதாக இல்லை எனக் கூறியுள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரிஷா, சிம்பு, சங்கீதா, கிரிஷ், ஆண்ட்ரியா, அனிருத் உள்ளிட்ட பலர் குறித்து அவதூறு கருத்துக்களை சுசித்ரா அடுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...