கோட் படத்தால் மகிழ்ச்சியில் விஜயகாந்த் குடும்பம்! உயிரோடு இருந்திருந்தா கூட இந்த அளவு காண்பிச்சிருக்க மாட்டாங்க..

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டு வருகிறது கோட் திரைப்படம். இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி, சினேகா ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேலும் இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா போன்ற 90களில் கலக்கிய பல நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய் இந்த படத்திற்காக தன்னை மிகவும் வறுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதற்காக அமெரிக்காவிற்கெல்லாம் சென்று புதிய தொழில்நுட்பங்களில் தன்னை ஈடுபடுத்தி உருவத்தில் பல மாற்றங்கள் செய்து இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

இதை அடுத்து விஜய் தனது 69ஆவது படத்தில் எச் வினோத்துடன் பணியாற்ற இருக்கிறார். இந்த இரு படங்களுக்குப் பிறகு நேரடியாக விஜய் அரசியலில் களம் இறங்குகிறார். இந்த நிலையில் கோட் திரைப்படத்தில் விஜயகாந்தை ஏ.ஐ மூலம் மீண்டும் கொண்டு வரப் போவதாக சில செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அது உண்மை என்றும் சொல்லப்பட்டது. இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவலின் படி இந்த படத்தில் விஜயகாந்தின் வருகை எந்த காட்சியில் இடம்பெறும்? எத்தனை நிமிடங்கள் வருகிறார்? என்பதை பற்றிய ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏ.ஐ மூலமாக உருவாகும் விஜய்காந்த் இந்த படத்தில் கிளைமேக்ஸ் முந்தைய காட்சியில் வருகிறாராம். கிட்டத்தட்ட இரண்டரை நிமிடங்கள் அந்த காட்சியில் வருவதாகவும் சொல்லப்படுகிறது. படத்தின் ஆரம்பத்திலேயே விஜயகாந்தை கொண்டு வந்தால் படத்திற்கான ஹைப் போய்விடும் என்பதற்காக கிளைமேக்ஸ்க்கு முந்தைய காட்சியில் அவரை காட்டுவதாக தகவல் சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தை பிரேமலதாவும் பார்த்து மிகவும் பிரமித்து போனாராம்.அந்த அளவுக்கு விஜயகாந்தை இந்த படத்தில் நல்ல முறையில் காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...