ரிலீஸ் செய்ய முடியாமல் திணறிய ரகுவரன் படம்.. ரிலீஸ் செய்ய உதவிய முதல்வர் கலைஞர்..!

தமிழ் திரை உலகில் ரஜினி, கமல் உள்பட பல பிரபலங்களை வைத்து படம் எடுத்தவர் எஸ்.பி.முத்துராமன். மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு திரைப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்த நிலையில் அந்த படம் வியாபாரம் ஆகாமல் முடங்கி இருந்தது. இதனையடுத்து அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அந்த படத்தை பார்த்து அரசே இந்த படத்தை ரிலீஸ் செய்யும் என்று கூறினார். அதன் பிறகுதான் அந்த படம் ரிலீஸ் ஆனது.

எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய ‘ஒரு மனிதனின் கதை’ என்ற நாவல் அதே பெயரில் ஏவிஎம் தயாரிப்பில் தூர்தர்ஷனில் தொடராக வந்தது. இந்த தொடரில் ரகுவரன் நடித்திருந்தார். இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தத்தால் திரைப்படமாக எடுக்க ஏவிஎம் முடிவு செய்தது. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் தியாகு என்ற பெயரில் இந்த திரைப்படம் உருவானது. ரகுவரன், நிழல்கள் ரவி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரேகா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்த படத்தில் மருத்துவராகவும் ரகுவரன் இந்த படத்தில் மதுவுக்கு அடிமையானவராகவும் நடித்திருந்தனர்.

அட்டர் பிளாப் ஆன படத்தை மீண்டும் எடுத்து சில்வர் ஜூப்ளி ஹிட்டாக்கிய விசு.. என்ன படம் தெரியுமா?

இந்த படம் எடுக்கப்பட்டு ரிலீசாக தயாராக இருந்தபோது இந்த படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் யாரும் ரிலீஸ் செய்ய முன்வரவில்லை. ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு, எஸ்.பி.முத்துராமனின் இயக்கம் என இரண்டு மிகப்பெரிய சிறப்பான அம்சங்கள் இருந்தும் அந்த படத்தை யாரும் வாங்கவில்லை. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் இருந்தனர்.

இந்த நிலையில் தான் எழுத்தாளர் சிவசங்கரி டெல்லியில் இருந்து சென்னைக்கு விமான மூலம் வந்து கொண்டு இருந்தார். அதே விமானத்தில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் பயணம் செய்தார். அப்போது, சிவசங்கரி, கருணாநிதியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். என்னுடைய கதை, திரைக்கதையில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் தியாகு என்ற படம் உருவாகியுள்ளது. மதுவுக்கு அடிமையான ஒருவன் திருந்தி வாழ்வது எப்படி என்ற விழிப்புணர்வு குறித்த கதை. ஆனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை, நீங்கள் ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று கேட்டார். மறுநாளே அந்த படத்தை பார்ப்பதாக கலைஞர் கருணாநிதி வாக்குறுதி அளித்தார்.

download

முதலமைச்சர் படம் பார்ப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கலைஞர் கருணாநிதி  இந்த படத்தை பார்த்தவுடன் எஸ்.பி.முத்துராமனிடம், இதுமாதிரி கூட நீங்கள் படம் எடுப்பீர்களா என்று கேட்டார். அதன் பிறகு மது ஒழிப்பு கமிட்டியிடம் கலந்து பேசிவிட்டு தயாரிப்பாளர் சரவணனை அழைத்தார். இந்த படத்தை அரசே ரிலீஸ் செய்து மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் என்று கூறினார். இதனால் ஏவிஎம் சரவணன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்த ரஜினி.. 2 நாட்களை திருப்பி கொடுத்த இயக்குனர்.. 175 நாள் ஓடிய குருசிஷ்யன்..!

1990ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி தியாகு ரிலீஸ் ஆனது. படத்தின் ஆரம்பத்தில் கருணாநிதியின்  உரையும் இடம்பெற்றது என்பதால் இந்த படம் பெரும் கவனத்தை பெற்றது. மேலும் இந்த படத்திற்கு அனைத்து திரையரங்குகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால் கலைஞர் கருணாநிதி உதவி செய்தும் கூட இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மேலும் இந்த படத்தை தூர்தர்ஷன் வாங்க மறுத்துவிட்டதாகவும் அதன் பிறகு சன் டிவி இந்த படத்தை குறிப்பிட்ட தொகைக்கு வாங்கினாலும் கடைசி வரை ஒளிபரப்பவே இல்லை என்றும் கூறப்பட்டது.

கமல் பார்த்து பயந்த ஒரே நடிகர்.. ரஜினியுடன் நெருக்கமானவர்.. நடிப்பு ராட்சசன் ரகுவரனின் அறியாத தகவல்..!

ஒரு நல்ல திரைப்படத்தை முதல்வரே முயற்சி செய்து வெளியிட்ட போதிலும் அந்த படம் மக்கள் மத்தியில் சென்று சேராதது அனைவருக்குமே மிகப்பெரிய வருத்தம் தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...