ஜெய்க்கு திருமணம் ஆகவில்லையாம்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…

இசையமைப்பாளர் தேவாவின் மருமகனான நடிகர் ஜெய் 2022 ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘பகவதி’ திரைப்படத்தில் விஜயின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கிய ஸ்போர்ட்ஸ் திரைப்படமான ‘சென்னை-600028’ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்னர் 2008 ஆம் ஆண்டு ஜெய் ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தின் நாயகனாக நடித்தார். இப்படம் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால்’ பாடல் மெகாஹிட் ஆனது.

அதைத் தொடர்ந்து ‘வாமனன்’, ‘கோவா’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ராஜா ராணி’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘வடகறி’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘பலூன்’, ‘கலகலப்பு 2′, அன்னபூரணி போன்ற திரைப்படங்களில் நடித்தார். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தவர் ஜெய்.

இந்நிலையில் நடிகர் ஜெய்யுடன் காரில் நடிகை பிரக்யா நெக்ரா கழுத்தில் தாலியுடன் புதிய வாழ்க்கை ஆரம்பம் கடவுளின் ஆசிர்வாதத்தோடு’ என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஜெய்க்கு திருமணம் ஆகிவிட்டதா என்ற குழப்பத்திற்கு ஆளானார்கள்.

தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெய் தனது இன்ஸ்டா பக்கத்தில் நான் 90’ஸ் கிட் மற்றும் சிங்கள் என்று போஸ்ட் செய்திருந்தார். அதேபோல் நடிகை பிரக்யா நெக்ரா அன்மேரீட் அண்ட் சப்போர்டிங் சிஎஸ்கே என்று போஸ்ட் செய்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்ததாக இருக்கலாம் என்று சொல்லி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...