இந்தப் பாட்டுல இப்படி ஓர் சிறப்பா..? பாடல் மேக்கிங் வீடியோ.. அப்பவே அதில் கில்லியாக இருந்த மூவர் கூட்டணி!

சமீப காலமாக சினிமாக்களில் பாடல் மேக்கிங் வீடியோ என்பதனை தனியாக வெளியிட்டு அந்தப் பாடலுக்கான புரோமோஷனை இசையமைப்பளார், கவிஞர், பாடகர் ஆகிய மூவரும் இணைந்து ஸ்கிரிப்ட் தயார் செய்து அதில் நடித்து பின் பாடலை வெளியிடுகின்றனர்.

இதற்கு சமீபத்திய அனிருத் பாடல்கள், மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள், யுவன் பாடல்கள் ஆகியவை இந்த டிரெண்டிங்கில் இணைந்து வருகிறது. அனிருத் நெல்சன் கூட்டணியில் பீஸ்ட் அரபிக்குத்து, ஜெயிலர் பாடல்கள், யுவனுக்கு லவ்டுடேவில் ஊரோ அவளைப் பார்த்தா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பல பாடல்கள் என பாடல்கள் உருவாக்கும் முறை பற்றி புரோமோ வீடியோவை வெளியிடுவார்கள்.

இதேபோல் இளையராஜாவும், கல்யாண மாலை பாடல் போன்ற சில பாடல்களில் அவரே தோன்றி பாடல் உருவாகும் விதத்தைப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் இதற்கெல்லாம் முன்னோடியாக அந்தக் காலத்திலேயே பாடல் மேக்கிங்கில் ஒரு புதுமையைச் செய்திருப்பார்கள் இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு. நாகேஷ் கதாநாயகனாக நடித்து 1964-ல் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் சர்வர் சுந்தரம்.

சாதாரண சர்வராக இருந்து கதாநாயகனாக உருவெடுக்கும் நாகேஷ் தனது முதல் பாடலுக்காக தயாராவது போன்று ஒரு காட்சி அமைந்திருக்கும். அப்போது இடம்பெறும் பாடல்தான் அவளுக்கென்ன அழகிய முகம்.. அவளுக்கென்ன இளகியமனம்.. இப்பாடலை நாம் எத்தனையோ முறை கேட்டிருக்கலாம். பார்த்திருக்கலாம். ஆனால் பாடலில் இந்த ஒரு விஷயத்தைக் கவனித்திருக்க மாட்டோம்.

மெட்டுக்குப் பாட்டா? பாட்டுக்கு மெட்டா? வைரலாகும் வாலி-நா.முத்துக்குமார் பேட்டி

இப்பாடலின் ஆரம்பத்தில் ஸ்டுடியோவில் பாடல் பதிவுசெய்யப்படுவது போன்று காட்டப்பட்டிருக்கும். அப்போது அந்த பிரேமில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மெட்டமைக்க, டி.எம்.எஸ். பாட ஆரம்பிப்பார். அப்போது அவர்களின் அருகில் கவிஞர் வாலியும் அமர்ந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரே பாடலில் இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என மூவர் கூட்டணியும் ஒன்று சேர்ந்து பாடலை உருவாக்க, அதன்பின் அப்படியே காட்சி நாகேஷ் நடிப்பது போன்று காட்டப்படும்.

இப்போதுள்ள டிரெண்டிங்கை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்னரே திரையில் காட்டி புதுமையான முறையில் பாடலை உருவாக்கியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...