தமிழில் எனது முதல் விருது இந்தப் படத்திற்காக கிடைத்தது நெகிழ்ச்சியாக உள்ளது… நிமிஷா சஜயன் எமோஷனல்…

மலையாள நடிகையான நிமிஷா சஜயன் தற்போது தமிழில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். மலையாளத்தில் ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தார். இந்த திரைப்படம் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து ‘ஜிகர்தண்டா 2’, ‘சித்தா’ ஆகிய திரைப்படத்தில் நடித்து பிரபலமானார் நிமிஷா சஜயன். சித்தா படத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.

‘சித்தா’ திரைப்படம் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் தயாரித்து நாயகனாக நடித்த ஒரு விழிப்புணர்வு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் நாயகியாக நிமிஷா சஜயன் துப்புரவு பணியாளராக நடித்திருந்தார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு எப்படி நடக்கிறது என்பதை எடுத்துக் கூறும் விதமாக இப்படம் அமைந்திருந்தது.

இத்திரைப்படம் பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்கச் செய்தது. குறிப்பாக பெண்கள், பெண். குழந்தைகளைப் பெற்றவர்கள் இப்படத்தைப் பார்த்து கண்ணீர் சிந்தினர். அந்த அளவிற்கு இத்திரைப்படம் மக்களின் நடுவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், தற்போது ‘சித்தா’ திரைப்படத்தில் நடித்ததற்காக நிமிஷா சஜயன் அவர்களுக்கு JFW விருது வழங்கி கௌரவித்துள்ளது. விருதை பெற்றுக் கொண்ட பின்பு மேடையில் பேசிய நிமிஷா சஜயன், இது தமிழில் நடித்ததற்காக எனக்கு கிடைத்த முதல் விருது, அதுவும் ‘சித்தா’ திரைப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது, இதற்காக நான் அருண்குமார் அவர்களுக்கும் சித்தார்த் அண்ணாவிற்கும் தான் நன்றி கூற வேண்டும் என்று எமோஷனலாக பேசியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...