100 நிமிடங்களாக நிற்காத கால்கள்.. 5000 நடனக் கலைஞர்களின் மகத்தான சாதனை.. அதிர்ந்த சென்னை அரங்கம்!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுபவர் நடன இயக்குநர் பிரபுதேவா. சிறு வயதிலேயே பரதம் கற்றுக் கொண்டு பின் தனது தந்தை சுந்தரம் மாஸ்டரிடம் நடனம் கற்றுக் கொண்டு அதன்பின் நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த பிரபுதேவா ஆரம்பத்தில் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி திரையில் தோன்றினார்.

இதயம் படத்தில் ஏப்ரல் மேயிலே, வால்டர் வெற்றிவேல் படத்தில் சின்ன ரோசாவே பாடலும், ஜென்டில் மேன் படத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலும், சூரியன் படத்தில் இடம் பெற்ற லாலாக்கு டோல் பாடலும் பிரபுதேவாவை அடுத்த லெவலுக்கு செல்ல வைத்தது.

தொடர்ந்து பல பாடல்களில் நடனம் ஆடியவர் இந்து படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இருப்பினும் காதலன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. அதன்பின் நடனம், நடிப்பு, இயக்கம் என மூன்றிலும் கால்பதித்து தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாக இருக்கிறார் பிரபுதேவா. இவரின் நடனத் திறமையைப் பார்த்து இவரிடம் உதவி மாஸ்டராக பணிபுரிந்தவர்கள் இன்று பலர் டான்ஸ் மாஸ்டர்களாக பெரிய பெரிய படங்களில் பணியாற்றி வருகின்றனர்.

பிரபுதேவாவின் இந்த நடனத் திறமையைப் போற்றும் வகையில் அவரது ரசிகர்களும், அவரது மாணவர்களும் இணைந்து ஓர் உலகச் சாதனையைச் செய்ய விரும்பினர். அதன்படி அவருக்குப் புகழ் சேர்க்கும் வண்ணம் அவருடைய பாடல்களைக் கொண்டு சுமார் 100 நிமிடங்களுக்கு, 5000 நடனக் கலைஞர்கள் இணைந்து தொடர்ச்சியாக நடனமாட முடிவெடுத்தனர்.

இந்தப் பாட்டுல இப்படி ஓர் சிறப்பா..? பாடல் மேக்கிங் வீடியோ.. அப்பவே அதில் கில்லியாக இருந்த மூவர் கூட்டணி

இதற்காக சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தைத் தேர்வு செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த உலக சாதனையைச் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பிரபுதேவா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. சொன்னபடி தொடர்ச்சியாக 100 நிமிடங்கள் பிரபுதேவாவின் பாடல்களுக்கு நடனக் கலைஞர்களும், நடன மாணவர்களும் 100 நிமிடங்கள் நடனமாடி உலக சாதனை புரிந்தனர்.

விழாவில் பிரபு தேவா கலந்து கொள்வதாக இருந்து பின்னர் அவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது. இதனால நடனக் கலைஞர்கள் அதிருப்தி அடைந்தனர். பின் அங்கு சலசலப்பு நிலவ திடீரென வீடியோகாலில் தோன்றி நடனக்கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு அவர்களின் சாதனையைப் பாராட்டினார் பிரபுதேவா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews