கமல் பார்த்து பயந்த ஒரே நடிகர்.. ரஜினியுடன் நெருக்கமானவர்.. நடிப்பு ராட்சசன் ரகுவரனின் அறியாத தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தன்னைவிட மிஞ்சி விடுவாரோ என நாகேஷை அடுத்து பயந்த ஒரே நடிகர் ரகுவரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ரஜினிக்கு மிகவும் பிடித்த நடிகர் என்பதும் ஆச்சரியமான ஒன்று. அத்தகைய நடிப்பு ராட்சசன் ரகுவரன் குறித்து தற்போது பார்ப்போம்.

நடிகர் ரகுவரன் கேரளாவை சேர்ந்தவர். அங்கேதான் அவர் தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். அதன் பின்னர் அவர் குடும்பத்துடன் கோவை வந்தார். அங்கு அவர் தனது மேல் படிப்பையும் முடித்தார். இந்த நிலையில் ரகுவரனுக்கு சிறுவயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்பதில் தீராத ஆசை. அதனால் அவர் சென்னை வந்து நடிப்பு கல்லூரியிலும் படித்தார்.

விஜய் படம் உள்பட 4 படங்கள் தான்.. தமிழ் படமே வேண்டாம் என தெறிச்சு ஓடிய நடிகை..!

raghuvaran5

இதனை அடுத்து தமிழில் ’ஏழாவது மனிதன்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் விமர்சன அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் வசூல் அளவில் பெரிய தோல்வி அடைந்தது. சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருது பெற்ற போதிலும் அந்த படத்தின் தோல்வியால் ரகுவரன் மனம் வருத்தமடைந்தார்.

அதன் பிறகு அவர் ஒரு ஓடை நதியாகிறது உள்பட ஒருசில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இதனை அடுத்து தான் இனிமேல் ஹீரோ வேடம் வேண்டாம் வில்லனாக நடிப்போம் என்று முடிவு செய்தார். அவருடைய உயரம் வில்லத்தனத்திற்கு ஏதுவாக இருந்தது.

raghuvaran4

அதனை அடுத்து அவர் பல திரைப்படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தார். குறிப்பாக ’பூவிழி வாசலிலே’, ’மக்கள் என் பக்கம்’ போன்ற படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தார். இதனை அடுத்து முதல் முறையாக ரஜினியுடன் அவர் ’ஊர்க்காவலன்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். அதனை அடுத்து ‘சிவா’ என்ற படத்தில் வில்லனாக நடித்தார்.

இந்த இரண்டு படங்களிலும் ரகுவரனின் நடிப்பை பார்த்து அசந்து போன ரஜினி இனிமேல் தன்னுடைய எல்லா படத்திலும் ரகுவரனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதனை அடுத்து மனிதன், ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் ரகுவரன் நடித்தார். குறிப்பாக பாட்ஷா திரைப்படத்தில் ரஜினியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ரகுவரன் நடிப்பு இருந்தது என்பதும் அதை ரஜினியும் பரந்த மனப்பான்மையுடன் ஏற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு வந்து மண்ணை கவ்விய நடிகர்கள்.. விஜய்க்கு வெற்றி கிடைக்குமா?

ரஜினியை அடுத்து அஜித், விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் அவர் நடித்தாலும் கமல்ஹாசன் உடன் மட்டும் ஒரு படத்தில் கூட அவர் நடிக்கவில்லை. அதற்கு காரணம் ரஜினியுடன் ரகுவரன் நெருக்கமாக இருந்தது என்ற ஒன்றாக இருந்தாலும் தன்னைவிட ரகுவரன் சிறப்பாக நடித்து விடுவார் என்ற பயம் காரணமாகவே அவரை தன்னுடைய படத்தில் நடிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது.

raghuvaran2

குறிப்பாக ஆளவந்தான் திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் முதலில் ரகுவரன் நடிப்பதாகத் தான் இருந்தது. ஆனால் நானே வில்லனாகவும் நடிக்கிறேன் என்று கூறி அந்த படத்தில் அடம் பிடித்து கமல்ஹாசன் வில்லன் கேரக்டரில் நடித்ததாக கூறப்படுவதுண்டு.

raghuvaran1

இந்த நிலையில் தான் நடிகை ரோகிணி தனது 15ஆம் வயதிலிருந்து ரகுவரனை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் இதனை அடுத்து ஒரு கட்டத்தில் அவர் தனது காதலை வெளிப்படுத்திய நிலையில் ரகுவரனும் அந்த காதலை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து கொண்டார். 1996 ஆம் ஆண்டு ரகுவரன் – ரோகிணி திருமணம் நடைபெற்றது. ஆனால் ஆறு வருடங்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்த தம்பதிக்கு ரிஷிவரன் என்ற ஒரு மகன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கே பாலசந்தரின் கண்டுபிடிப்பு.. பிஎச்டி டாக்டர் பட்டம்.. நடிகர் சார்லியின் அரியப்படாத தகவல்..!

விவாகரத்துக்கு பின் தனிமையில் வாடிய ரகுவரன் உடல்நல குறைவு காரணமாக 2008 ஆம் ஆண்டு காலமானார். இன்றளவும் ரகுவரனின் வில்லத்தனமான நடிப்பை மிஞ்சுவதற்கு ஆள் இல்லை என்பதே அவரது நடிப்பின் சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...