எட்டாம் வகுப்பு தேர்ச்சியா? குற்ற வழக்கு தொடர்வுத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

By Staff

Published:

திருப்பூர் மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் மற்றும் உடுமலைப்பேட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1ல் பணிபுரியும் அரசு உதவி வழ்க்கறிஞர் நிலை-2 அலுவலகத்தில் இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த இரண்டு அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களையும் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விகிதம்: தகுதியான நபர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் கிடைக்கும்.

தேர்வு செய்யும் முறை: நேர்முகத்தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை : கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அச்சிடவும். அச்சிட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு 13.09.2024 மாலை 05.45 மணிக்குள் கிடைக்குமாறு பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

உதவி இயக்குநர்,
குற்ற வழக்கு தொடர்வுத்துறை,
அறை எண்: 319 & 320,3-வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்- 641604.

Assistant Director,
Office of the Criminal Prosecution,
Room NO: 319 & 320,
3rd Floor Collectorate Campus,
Tiruppur-641604.

விண்ணப்ப படிவம் : https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2024/08/2024082842.pdf

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் : https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2024/08/2024082860.pdf