தேர்வு இல்லை.. கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Published:

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Relationship Manager பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியுமுள்ளவர்கள் 17.09.2024 தேதிக்கு முன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காலிப்பணியிடங்கள்:
Relationship Manager பணிக்கென பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate முடித்தவர்களே விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு KVB-ன் விதிமுறைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 17.09.2024க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.karurvysyabank.co.in/Careers/docs/RM%20TFX_Posting%20CBE.pdf

மேலும் உங்களுக்காக...