உதடானது அடிக்கடி உலர்ந்து போகும்பட்சத்தில் பொதுவாக நாம் லிப் பாமினைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் இனி நீங்கள் லிப் பாமினை பயன்படுத்தாமல் இந்த பேக்கினை பயன்படுத்திப் பாருங்கள்.
தேவையானவை:
பாலாடை- 1 ஸ்பூன்
ரோஜாப் பூ- 1
தேன்- 1 ஸ்பூன்
செய்முறை:
1. ரோஜாப் பூவின் இதழ்களைப் பிரித்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டவும்.
2. அடுத்து மிக்சியில் இந்த ரோஸ் வாட்டருடன் பாலாடை சேர்த்து மைய அரைக்கவும்.
3. இறுதியில் இவற்றுடன் தேன் சேர்த்தால் பேக் ரெடி.
இந்த பேக்கினை உதட்டில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால் உதடு அடிக்கடி உலர்ந்து போவது சரியாகும்.