தலைமுடி கொட்டும் பிரச்சினைகள் நம் தாத்தா பாட்டி தலைமுறையில் இளம் வயதில் இருப்போருக்கு இருக்கவில்லை. அதற்குக் காரணம் அவர்கள் கெமிக்கல் கலக்காத இயற்கையாக ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தியதுதான்.
தேவையானவை:
ஆவாரம் இலை- கைப்பிடியளவு
நெருஞ்சி இலை- கைப்பிடியளவு
கற்றாழை- 1 துண்டு
செய்முறை:
1. ஆவாரம் இலை மற்றும் நெருஞ்சி இலையினை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து அதனுடன் கற்றாழையின் இருபுறமும் கீறி சதைபற்றினை வெட்டி கைகளால் மசித்துக் கொள்ளவும்.
3. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்தால் இயற்கையான ஷாம்பூ ரெடி.
இதனை வாரத்தில் இரண்டு முறை என்ற அளவில் பயன்படுத்தி வரவும்.