தலைமுடி கொட்டும் பிரச்சினைக்குத் தீர்வு தரும் வகையிலான ஹேர் ஆயில் ஒன்றினை நாம் எவ்வாறு தயார் செய்வது என்றும், எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.
தேவையானவை:
செம்பருத்தி பூ- 3
தேங்காய் எண்ணெய்- 30 மில்லி
ஆலிவ் ஆயில்- 3 ஸ்பூன்
செய்முறை:
1. செம்பருத்திப் பூவின் இதழ்களை ஆய்ந்து கொள்ளவும்.
2. இதனை லேசாக வெயிலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் போட்டு இரண்டு நாட்கள் ஊறவிடவும்.
3. அடுத்து இதனை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும். இறுதியில் இவற்றுடன் ஆலிவ் ஆயில் சேர்ந்தால் செம்பருத்தி ஹேர் ஆயில் ரெடி.
இந்த செம்பருத்தி ஹேர் ஆயிலை வாரத்தில் இரண்டு முறை என்ற அளவில் பயன்படுத்தினால் தலைமுடி கொட்டும் பிரச்சினை முடிவுக்கு வரும்.