வறண்ட சருமப் பிரச்சினைகளுக்கு எலுமிச்சைத் தோல் ஃபேஸ்பேக்!!

By Staff

Published:

01f7d206980950593e9e73ee135ed662

எலுமிச்சை பழத்தின் தோலை நறுக்கி முகத்தில் அழுத்தி தேய்த்தால் இறந்த செல்கள் அழிந்துவிடும், இதனால் முகமானது பளிச்சென்று இருக்கும். இதுவே இந்த எலுமிச்சைத் தோலினை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் காய வைத்துப் பயன்படுத்தினால் வறண்ட சருமப் பிரச்சினை சரியாகிவிடும்.

தேவையானவை:

எலுமிச்சைத் தோல் – 4 டேபிள் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்

பசும் பால்- 4 ஸ்பூன்

செய்முறை:

  1. எலுமிச்சைத் தோலை சிறு துண்டுகளாக்கி வெயிலில் காய வைக்கவும்.
  2. அடுத்து இந்த எலுமிச்சைத் தோலை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
  3. இந்த எலுமிச்சைப் பொடியுடன் தேங்காய் எண்ணெய்ம் பசும் பால் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை முகம், கை, கால் என வறண்ட தோல் உள்ள இடங்களில் அழுத்தி தேய்க்கவும், அதன்பின்னர் சோப்பு போட்டு கழுவி விடவும், தோலில் உள்ள வறட்சித் தன்மையானது குறைந்திருக்கும்.

Leave a Comment