தலைமுடி கொட்டும் பிரச்சினையினை ஆரம்பத்திலேயே சரி செய்துவிட வேண்டும். இப்போது வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களைக் கொண்டு ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
இஞ்சி- 1 துண்டு
தேங்காய்- 1 மூடி
தேன்- 2 ஸ்பூன்
செய்முறை:
1. இஞ்சியின் தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து தேங்காயினைத் துருவி அதில் இருந்து பால் பிழிந்து கொள்ளவும்.
3. அடுத்து தேங்காய்ப் பாலுடன் இஞ்சியை சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்து தேன் சேர்த்தால் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் தடவி ½ மணி நேரம் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி கொட்டும் பிரச்சினை சரியாகும்.