தலைமுடி உதிர்வினைச் சரிசெய்யும் வகையிலான ஹேர் ஆயிலை எப்படித் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
ஆவாரம் பூ- கைப்பிடியளவு
தேங்காய் எண்ணெய்- 50 மில்லி
நல்லெண்ணெய்- 20 மில்லி
செய்முறை:
1. ஆவாரம்பூவினை தண்ணீரில் அலசி வெயிலில் லேசாக உலர்த்திக் கொள்ளவும்.
2. அடுத்து இந்த ஆவாரம்பூவினை தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலவையுடன் சேர்த்து நன்கு 3 நாட்கள் ஊறவைக்கவும்.
3. அடுத்து இதனை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கினால் ஆவாரம்பூ ஹேர் ஆயில் ரெடி.
இந்த ஹேர் ஆயிலை வாரத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தவும்.