தலைமுடி அடர்த்தியினை அதிகரிக்கச் செய்யும் பொருட்களில் ஒன்று நெல்லிக்காய், இந்த நெல்லிக்காயில் ஹேர்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
நெல்லிக்காய் – 2,
சீகைக்காய் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- நெல்லிக்காயினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- அடுத்து அதனுடன் நீர் சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து இந்த பேஸ்ட்டுடன் சீகைக்காய் பவுடர், தேங்காய் எண்ணெய் சேர்த்தால் நெல்லிக்காய் ஹேர்பேக் ரெடி.
இந்த நெல்லிக்காய் ஹேர்பேக்கினை தலையில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் ஊறவிட்டு அலசினால் தலைமுடி அடர்த்தியாகும்.