பொதுவாக பார்லரில் செய்யப்படும் ஃபேஷியல்களில் கோல்டன் பேஷியல் மற்றும் ஃப்ரூட் ஃபேஷியல் போன்றவற்றினையே அனைவரும் விரும்பி செய்து கொள்வர். அவற்றில் ஒன்றான ஃப்ரூட் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
மாம்பழம்- 1 துண்டு
வாழைப்பழம்- 1/2
பப்பாளிப் பழம்- 1 துண்டு
பால்- கால் கப்
செய்முறை:
- மாம்பழம், வாழைப்பழம், பப்பாளிப் பழத்தினை தோல்நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- அடுத்து இவற்றை மிக்சியில் போட்டு பால் சேர்த்து குழைய அரைத்துக் கொள்ளவும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் மட்டும் கை, கால்களிலும் அப்ளை செய்ய முடியும். இவ்வாறு செய்துவந்தால் முக அழகு நிச்சயம் கூடும்.