பெண்களே… உங்க வீட்ல பால் இருக்கா? அப்போ பார்லரே செல்ல தேவையில்லை…!

உடலுக்கு அதிக நன்மை தரக்கூடிய ஒரு பொருள் பால். பாலில் புரதம், கால்சியம், மெக்னீசியம், லாக்டிக் அமிலம், கொழுப்பு என அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்தப் பால் உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானது அல்ல வெளிப்புறம் நம் சருமத்திற்கும் மிக மிக நல்லது. நம் சருமத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு காண பால் ஒன்றே போதும்.

skin

பெண்கள் தங்களுடைய முகத்திற்கு ஃபேசியல் செய்ய அழகு நிலையங்களுக்கு செல்வது உண்டு. இந்த ஃபேசியல்கள்  முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருமைகள் மறைய சூரிய வெளிச்சத்தால் ஏற்பட்டுள்ள டானிலிருந்து விடு பட, முகச்சுருக்கங்களை நீக்க என பல நன்மைகள் தரும். இந்த அனைத்து நன்மைகளையும் நாம் காய்ச்சாத பாலை மட்டும் கொண்டே பெற முடியும்.

முகத்திற்கான ஃபேசியலில் பல படிநிலைகள் உண்டு அவற்றில் சில முக்கிய படிநிலைகள்.

  • தூய்மைப்படுத்துதல்
  • எக்ஸ்போலியட்செய்தல்
  • ஃபேஸ் பேக்
  • மசாஜ் செய்தல்
  • டோனர்

milk skin

தூய்மைப்படுத்துதல் (கிளன்சிங்): 

கிளன்சரினை பொதுவாக முகத்தில் உள்ள அழுக்கு, தூசுக்கள், எண்ணெய் போன்ற மாசுகளை நீக்குவதற்கு பயன்படுத்துவார்கள். முகத்தில் போடப்பட்ட ஒப்பனையை நீக்குவதற்கும் கிளிசரினை பயன்படுத்துவது உண்டு. இந்த அனைத்து வேலைகளையும்  காய்ச்சாத பால் செய்து முடித்து விடும்.

turmeric milk

  1. இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பாலினை எடுத்துக்கொள்ள வேண்டும். ( வெறும் பாலை மட்டும் உபயோகப்படுத்தலாம் விரும்பினால் சில துளி எலுமிச்சை சாறு அல்லது மஞ்சள் சேர்த்தும் பயன்படுத்தலாம்)
  2. ஒரு நல்ல காட்டனை எடுத்து அதை பாலில் நனைத்து முகம் முழுவதும் கழுத்துப் பகுதிகளில் மென்மையாக தேய்த்து எடுக்கவும்.
  3. 5 நிமிடங்கள் இதைத் தொடர்ந்து செய்ய முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்கி முகம் உடனடி பொலிவு பெறுவதை பார்க்கலாம்.
  4. பிறகு நீரினை கொண்டு முகத்தை கழுவலாம்.

எக்ஸ்போலியட் செய்தல்:

பாலில் புரதம் மற்றும் லாக்டிக் அமிலம் இருப்பதனால் இது சிறந்த எக்ஸ்போளைட்டாக வேலை செய்கிறது. இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவி புரிகிறது. இது முகத்தை அதிக அளவு பொலிவு பெறச் செய்ய உதவுகிறது.

images 2 14 1

  1. பாலுடன் சிறிதளவு காபித்தூளினை சேர்த்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளவும்.
  2. மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் முகத்தை மென்மையாக கைகளினால் வட்ட வடிவில் தேய்த்துக் கொள்ளவும்.
  3. பிறகு நீரினை கொண்டு முகத்தை கழுவிக்கொள்ளவும்.

முகத்திற்கு பேக் போடுதல்:

பாலை பயன்படுத்தி நாம் ஃபேஸ் பேக் போடும்போது முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குகிறது. முகத்தில் உள்ள கருமை நீங்கி பாதிப்படைந்த சருமத்தை சரி செய்கிறது. ஏனெனில் பாலில் விட்டமின் பி ஆல்ஃபா ஹைட்ராக்சி ஆசிட், அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன.

face pack

  1. இரண்டு ஸ்பூன் முல்தானி மிட்டியை எடுத்துக் கொள்ளவும் அதில் காய்ச்சாத பாலினை ஊற்றி பசை போல் தயாரித்துக் கொள்ளவும்.
  2. முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் விட்டு விடவும்.
  3. பின்பு நீரினை கொண்டு சுத்தமாய் முகத்தை கழுவி கொள்ளவும்.

முகத்தை மசாஜ் செய்தல்:

முகத்திற்கு நல்ல ஒரு மசாஜ் கொடுப்பது மிகவும் முக்கியமான படிநிலை. முகத்தை பராமரிப்பதற்கு மசாஜ் மிகவும் அவசியம். இது முகம் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து நல்ல புத்துணர்ச்சியை தரும்.

massage

  1. பாலுடன் சிறிதளவு தேனை கலந்து ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.
  2. இதை முகம் முழுவதும் நன்கு மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.
  3. ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பிறகு முகத்தினை கழுவிக்கொள்ளலாம்.

டோனர்:

toner

பாலுடன் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து முகத்தை டோன் செய்து கொள்ளவும். நீண்ட நேரம் பாலுடன் இருப்பது சிலருக்கு பிடிக்காது என்றால் சிறிது நேரத்திற்கு பிறகு அதனை கழுவி விடலாம்.

இந்தப் படிநிலைகளை தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வாரம் இரண்டு முறை செய்தால் போதும் பார்லர் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை சரும பாதிப்பு என்று கவலை கொள்ளவும் வேண்டியதில்லை. பின்விளைவுகள் ஏதும் இல்லாத ஒரு ஃபேசியலை நமக்கு நாமே செய்து கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews