உடையில் வெற்றிலைக் கறை பட்டால், அந்த இடத்தில் வினிகர் ஊற்றி தேய்த்து கழுவினால் கறை போய்விடும். அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினிகரைப் பூசி 15 நிமிடம் வைத்திருக்கவும். பின்னர் சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட்டால் குக்கரின் கறை போய் குக்கர் பளிச் பளிச்..
வாஷ்பேஷனில் தண்ணர் உப்பு படிந்து கறையாக இருந்தால் வினிகருடன் சாக்பௌடர் கலந்து பூசி சிறிது நேரம் வைத்திருந்து பின் தேய்த்துக் கழுவவும்.
வெள்ளரிக்காயையும் தக்காளியையும் மெல்லியதாக வட்டவட்டமாக வெட்டி, அதனோடு பெரிய வெங்காயத்தை மெல்லியதாக வெட்டி கலந்துக்கனும். இக்கலவையில் சிறிது உப்பு போட்டு, மல்லி இலைகளை மேலே தூவி , கொஞ்சமாய் சிறிது வினிகரையும் ஆலிவ் எண்ணெயும் கலக்கவும். பின்பு பரிமாறவும். வேண்டுமானால் சிறிது மிளகு சீரக பொடியும் சேர்க்கலாம். வினிகர் கலந்து இந்த சாலட்ருசியாக இருப்பதோடு கொழுப்பையும் கரைக்கும். தவிர Anti inflammation வராமல் தடுக்கிறது. எதுவாயினும் அளவோடு சேர்ப்பது நல்லது.
குழந்தைகளின், ஃபீடிங் பாட்டிலை கழுவும்போது துளி வினிகர் விட்டுக் கழுவினால் சுத்தமாகிவிடும். வாசனை வராது.
பிளாஸ்க்கில், சொட்டு வினிகர் விட்டு கழுவினாலும் வாசனையில்லாத பிளாஸ்க் ரெடி. ஸ்கூலுக்கும், அலுவலகத்துக்கும் கொடுத்தனுப்பும் டிபன் பாக்ஸ்களையும் இப்படி கழுவலாம்!
ஃப்ரிட்ஜில் காய்கறிகளின் வாடை, பால் வாடை, மாவு வீச்சம் என கலவாயாக இருக்கும். எனவே வாரம் ஒரு முறை ஒரு ஸ்பூன் வினிகர் ஒரு மக் தண்ணீரில் கலந்து துடைத்தால் வாசம் வராது.
உல்லன் துணிகள் பளிச்சிட கையால் பின்னிய உல்லன் துணிகளைத் துவைக்கும்போது 2 டேபிள் ஸ்பூன் வினிகரைத் தண்ணிரில் கலந்தால் துணிகள் பளிச் .. பளிச்தான்.
வினிகரின் பயன்கள் தொடரும்..