முந்திரிப் பருப்பானது அதிக அளவு நார்ச்சத்துகள், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இத்தகைய முந்திரியில் தற்போது ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
முந்திரிப் பருப்பு- 5
தேங்காய்- துண்டுகள்
கஸ்தூரி மஞ்சள்- ½ ஸ்பூன்
செய்முறை:
1. முந்திரிப் பருப்பினை நன்கு ஊறவைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் தேங்காய்ப் பாலுடன் முந்திரிப் பருப்பினைப் போட்டு மைய அரைத்து கஸ்தூரி மஞ்சள் சேர்த்துக் கலந்தால் முந்திரி ஃபேஸ்பேக் ரெடி.
இந்த முந்திரி ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து, 30 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பளபளவென்று மாறும்.