பொதுவாக நாம் நம்மை அழகுபடுத்திக் கொள்ள பார்லருக்கே செல்வோம், ஆனால் இப்போது நான் சொல்லப்போகும் இந்த ஃபேஸ்பேக்கினை ட்ரை செய்தால் நிச்சயம் முகம் பளிச்சென்று மாறும். இதனை எவ்வாறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
வெண்ணெய்- 2 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள்- 2 ஸ்பூன்
பாசிப் பயறு – 2 ஸ்பூன்
செய்முறை:
1. பாசிப் பயறை நீரில் ஊறவைத்து 15 நிமிடங்கள் நன்கு ஊறவிடவும்.
2. அடுத்து அதனை மிக்சியில் போட்டு வெண்ணெய் சேர்த்து நன்கு குழைய அரைக்கவும்.
3. இறுதியில் கஸ்தூரி மஞ்சளை அதனுடன் சேர்த்தால் போதும் வெண்ணெய் ஃபேஸ்பேக் ரெடி.