பாதாம் பருப்பானது புரதச் சத்தினை அதிகம் கொண்டுள்ளது, அதனை அப்படியே சாப்பிடுவது எந்த அளவில் நன்மை பயக்குமோ அந்த அளவில் அதனை அரைத்துப் பூசும்போதும் நன்மை கிடைக்கும்.
தேவையானவை:
பாதாம் பருப்பு- 10
தயிர்- 3 ஸ்பூன்
தேங்காய்ப் பால்- 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
செய்முறை:
- பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
- அடுத்து இந்த பாதாம்பருப்பினை தயிர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
- அடுத்து இதனுடன் தேங்காய்ப் பால், எலுமிச்சை சாறு கலந்தால் பாதாம் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை நீங்கள் வாரத்தில் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் கூட பொலிவான சருமத்தைப் பெற முடியும்.