ஆண்கள் மட்டும் படிங்க! ப்ளீஸ்! – அழகு குறிப்புகள்

By Staff

Published:


114ab79015d2c96234294d4c413697bd

அழகு குறிப்புகள்ன்னாலே அது பெண்களுக்கானதுன்னு நினைக்கும் நினைப்பு தவறானது. மஞ்சள், பொட்டு, நகைகள், கூந்தல் அலங்காரமென கொஞ்சம் மெனக்கெட்டால்தான் பெண்கள் அழகா இருப்பாங்க. ஆனா அழகா தலைசீவி, முகத்தினை துடைத்து, பாந்தமாய் உடுத்தினாலே ஆண்கள் அழகுதான். தங்களை அழகுப்படுத்திக்க ஆண்கள் மெனக்கெடவே தேவையில்லை. ஆனாலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் வெளியில் செல்லும் ஆண்களின் சருமம் பெரிய அளவில் பாதிக்கின்றது. அதிலிருந்து மீண்டுவர சில டிப்ஸ் இதோ..

வேலை நிமித்தமாக வெளியில் சுற்றி முகம் கறுத்த ஆண்கள் ஐஸ் கட்டியை துணியில் கட்டி முகத்திற்கு ஒத்தடம் தர முகம் பொலிவடையும்.
2. வெளியில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்துவர முடி உதிர்வது குறையும்.
3. சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச்சாறு, புதினா இலையை உதட்டில் தடவிவர உதடு பழைய நிறம் திரும்பும்.
4. சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவி வர பழைய நிறம் திரும்பும்.
5. தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம். வெயிலில் பாதிக்கப்பட்ட சருமம் புத்துணர்ச்சி கொள்ளும்.
6. முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
7. சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.
8. சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.
9. புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம். இதனால் இறந்த செல்கள் நீங்கும்.
10. முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
11. அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆண்களுக்கான டிப்ஸ் தொடரும்..

Leave a Comment