குழந்தையின்மை தோஷமா- கல்யாணராமசாமியை வழிபடுங்க

By Staff

Published:

8ebaa98f88f47c7221bee962daa32c46

சிலருக்கு ஜாதக ரீதியாக ஒவ்வொரு கிரகங்களும் அமர்ந்திருக்கும் இடத்தை பொறுத்து புத்திரதோஷம் ஏற்படுகிறது. எங்கு அலைந்தாலும் யாரைப்பார்த்தாலும் குழந்தையின்மை பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது இல்லை.

இப்படி உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் உள்ள கல்யாணராமசாமியை வழிபடலாம்.

புதுக்கோட்ட மாவட்டமும் இராமநாதபுரம் மாவட்டமும் இணையும் எல்லை பகுதியில் இராமநாதபுரம்- நாகப்பட்டினம் ஈஸிஆர் சாலையில் மீமிசல் உள்ளது.

இங்குதான் இந்த கல்யாணராமசாமி கோவில் சாலையிலேயே அமைந்துள்ளது. இங்குள்ள பெருமாளை வணங்கினால் திருமண தோஷம், குழந்தையின்மை போன்ற ஜாதகரீதியான கர்ம ரீதியான தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.

ராகுவால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இங்குள்ள பெருமாளை வணங்கலாம். கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண புஷ்கரிணியில் குளித்து ஈரத்துடன் கல்யாணராமஸ்வாமியை வணங்கி வழிபட்டால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கை.

இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு கேதுவின் தானியமான கருப்பு உளுந்தை முகுந்தமாலா எனும் மந்திரத்தை உச்சரித்து தருகின்றனர்.

இதை 90 நாட்கள் சாப்பிட்டால் ஜாதக தோஷங்கள் விலகி குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Leave a Comment