சமயபுரம் மாரியம்மனுக்கு கண்மலர் சாற்றுவது எதனால்

By Staff

Published:

726aa5d6ab6241579af4d73d8fe4193d

திருச்சியில் உள்ளது புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில். இங்கு ஆடி மாதம் மட்டுமல்ல வருடத்தின் எல்லா நாளும் விழாக்கோலம்தான். இந்து சமய அறநிலையத்துறையில் அதிக அளவு வருமானம் வரும் கோவில்களில் தமிழக அளவில் இரண்டாவது பெரிய கோவில் இது. அந்த அளவு தினசரி பக்தர்கள் இக்கோவில் வந்து குவிகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி அன்று இரவு முழுவதும் சமயபுரம் சந்நதி வீதியில் தங்கியிருந்து காலை நீராடிவிட்டு அம்மனை தரிசனம் செய்தால் சகல நோய்களையும், தோஷங்களையும் நீக்கி, வேண்டும் வரம் தருவாள் மாரியம்மன்.

இங்கு சென்று இறங்கினாலே அம்மா கண் மலர் வாங்கிக்கங்க, அய்யா கண் மலர் வாங்கிக்கங்க என சுற்றிலும் உள்ள கடைக்காரர்கள் துரத்திக்கொண்டே வருவார்கள். கண் போன்று லேசான வெள்ளி தகட்டில் செய்யப்பட்ட பொருளே கண்மலர் ஆகும்.

இந்த கண்மலரை கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், விபத்துகளில் பார்வை குறை நேர்ந்தாலோ, வயது முதிர்ச்சியின் காரணமாக கண் பார்வையில் குறைப்பட்டாலோ சமயபுரம் வந்து அம்பாளுக்கு கண்மலர் சாத்தி வழிப்பட்டால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறலாம்.என்பது ஐதீகம்.

Leave a Comment