உடல் உருவங்களை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்துவது ஏன்

By Staff

Published:

aeab8b1619d88ec118269688ce89b719

சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்கம் போனிங்க என்றால் சில வியாபாரிகள் ஓடி வருவார்கள், சார் சார் அம்மனுக்கு கண் வாங்கி செலுத்துங்க சார் என மெல்லிய வெள்ளித்தகட்டில் கண் உருவத்தை கொண்டு வருவார்கள். இது போல பல உடல் உருவங்களை மெல்லிய தகட்டில் வைத்திருப்பார்கள். இது போல ராகு கேது பரிகாரத்தலங்களில் வெள்ளியிலான நாகர் தகட்டை வாங்கி உண்டியலில் போட சொல்வார்கள்.

இது எதற்காக என்றால் நாம் உடல் நிலை பாதிக்கப்படுகிறோம் உதாரணமாக நம் கையே ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுகிறது என்றால். சக்தி வாய்ந்த கோவில்களில் வீட்டில் உள்ளோர் நேர்த்திக்கடன் வைத்துக்கொள்வர் அம்மா தாயே சமயபுரம்  மாரியாத்தா என் மகன் கை சரியாகிவிட்டால் வெள்ளியில் கை வாங்கி தர்றேன் என்பார்கள் அப்படி சரியாகும்போது கோவில் சென்று இது போல விற்கும் வெள்ளியிலான கை உருவத்தை வாங்கி உண்டியலில் செலுத்துவார்கள். இது போல பொதுவான பிரச்சினைக்கு கண் வாங்கி தர்றேன் என வேண்டிக்கொள்வார்கள் பிரச்சினை சரியாகும்போது கண் உருவத்தை வாங்கி கோவில் உண்டியலில் செலுத்துவார்கள்.

எம்.ஜி.ஆர் சிறுநீரகப் பாதிப்பால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவருடைய கட்சிக்காரர் ஒருவர் தங்கத்தால் ஆன சிறுநீரகம் ஒன்றைச் செய்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் காணிக்கையாகச்  செலுத்த்தி இருக்கிறார். மனித உடல் இறைவனின் 

ஆலயத்துக்கு ஒப்பானது. உடலில் உள்ள அங்கங்களின் அடிப்படையில்தான் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.  ஆலயமாகிய உடலில் உள்ள பாகங்களில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைச்  சரிசெய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் கோயில்களில் கடவுளுக்கு உருவங்கள் காணிக்கையாகச் செலுத்தப்படுகின்றன. 

கை, காலில் அடிபட்டால் கை, கால் உருவங்களைக் காணிக்கையாகச் செலுத்துவது , பார்வை மங்கினால் கண் போன்ற உருவை வாங்கிப் போடுவது போன்ற பழக்கங்கள் உள்ளன. அப்படிச் செய்தால், அந்த பாகங்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் சரியாகும் என்பது மக்களின் நம்பிக்கை என்பது ஆன்மிகவியலாளர்களின் கருத்து.

Leave a Comment