ஜோதிடத்தில் பல வகை திதிகள் உள்ளது என்பது நேற்று தெளிவாகியிருக்கும். இந்த பல வகை திதிகளில் நேற்று பிரதமை திதியைப் பற்றி பார்த்தோம். இந்த ஒவ்வொரு திதி நாளன்று அதற்கேற்ற தெய்வத்தை வணங்குவது நமக்கு நல்லதை தரும்.
இன்று நாம் பார்க்க இருக்கும் திதிகள் துவிதியை திதி, திருதியை திதி போன்றனவாகும். முதலில் நாம் துவிதியை திதியைப் பற்றி பார்ப்போம். இந்த திதிக்கு ஏற்ற தெய்வம் பிரம்மன் ஆவார்.
இந்த திதி நாளன்று பிரம்ம தேவனை வணங்கி வழிபாடு செய்தால் அரசாங்கம் தொடர்புடைய வேலைகள் மிக விரைவில் நடைபெறும். இந்நாளன்று புதிதாக நாம் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அதாவது வீட்டுமனை, ஆடைகள், நகைகள் போன்ற எதுவேண்டுமானாலும் இருக்கலாம். மேலும் இந்நாளில் சிலை வைத்து வழிபாடு செய்வது குடும்பத்திற்கு மிகவும் நல்லது.
அடுத்தாக நாம் பார்க்க இருப்பது திருதியை திதி. இந்த திதிக்கு அதிபதி கௌரி என்று அழைக்கப்படும் பராசக்தி ஆவார். இந்த திருதியை நாளன்று குழந்தைக்கு முதன் முதலில் அன்னம் ஊட்டுபவர்கள் ஊட்டலாம்.
மேலும் இசை, சங்கீதத்தில் விருப்பம் உள்ளவர்கள் இந்நாளில் பயிற்சிகளை தொடங்கலாம்.
மேலும் இந்த திதி நாளில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு சீமந்தம் போன்றவற்றை செய்யலாம். மேலும் கோயில் சிற்பங்கள் செய்யும் காரியங்களில் ஈடுபடுவது மிகவும் நல்லது.