நம் உலகம் பல்வேறு அதியங்கள் நிரம்பியது. அதாவது நம் பிறப்பு முதல் இறப்பு வரை நாம் வாழும் இந்த வாழ்க்கை பல இன்ப துன்பங்களை உள்ளடக்கியது. இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் தான் நாம் எல்லாரும். நாம் பல நாட்களாக எந்த நாட்களில் என்னென்ன செய்யலாம் என்று பார்த்துக் கொண்டு வருகிறோம்.
இன்று தசமி மற்றும் ஏகாதசி திதி நாளில் என்னென்ன செய்தால் நமக்கு நல்லது என்பதை பார்க்க இருக்கிறோம்.
தசமி திதியின் அதிதேவதை எமதர்மன் ஆவார். ஆன்மிகப் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த நாளில் மேற்கொள்ளலாம். மேலும் தசமி நாளன்று எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ள நினைப்பவர்கள் இந்நாளில் ஓட்டப் பழகலாம். மத சடங்கள் எவையேனும் செய்ய நினைத்தால் இந்நாள் இவற்றை செய்ய ஏற்றது.
ஏகாதசி திதிக்கு அதிதேவதை ருத்ரன் எனப்படும் சிவபெருமான் ஆவார். இந்த நாள் திருமணம் செய்து கொள்வதற்கு ஏற்றது. உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருப்பின் அவற்றிற்கு இதுவரை மேற்கொண்ட சிகிச்சைகள் பலன் தராமல் போயிருந்தாலும் இந்த நாளில் சிகிச்சையை மேற்கொண்டால் அந்த காயம் நிச்சயம் குணமாகும். சிற்பங்கள் செதுக்குவது போன்ற தெய்வ காரியங்களில் ஈடுபட இந்நாள் உகந்தது.