விஸ்வக்சேனர் என்றால் யார்

விஸ்வக்சேனர் என்பவர் வைணவர்களால் வணங்கப்படும் ஒரு கடவுள். பொதுவாக சைவர்கள் முதலில் விநாயகரை வணங்கித்தான் மற்ற கோவில் பூஜைகளை செய்வது வழக்கம் முதல் வழிபாடு கணபதி வழிபாடு என்பதுதான் தாத்பர்யம் ஆகும். அந்த வகையில்…

viswak senar

விஸ்வக்சேனர் என்பவர் வைணவர்களால் வணங்கப்படும் ஒரு கடவுள். பொதுவாக சைவர்கள் முதலில் விநாயகரை வணங்கித்தான் மற்ற கோவில் பூஜைகளை செய்வது வழக்கம் முதல் வழிபாடு கணபதி வழிபாடு என்பதுதான் தாத்பர்யம் ஆகும்.

அந்த வகையில் சிவாலயங்களில் முதலில் விநாயகரை வணங்கி வழிபடுவது போல பெருமாள் கோவில்களில் விஸ்வக்சேனரை வழிபடுகிறார்கள்.

விஷ்ணுவின் படைகளுக்கெல்லாம் தலைவர் என்பதால் ‘சேனை முதலி’ என்று பெயர் பெற்றவர் இவர். ‘முதலி’ என்றால் முதல்வர் அல்லது முதன்மையானவர் என்று பொருள்.

விஷ்வக் என்பதே எல்லா இடமும் என்ற பொருள்படும். இவர் பெருமாளுக்கும் தாயாருக்கும் அடுத்தபடியாக இவர் குருநிலையில் பார்க்கப்படுகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன