வீட்டில் கட்டுக்கட்டாய் பணம் சேரனுமா?!

By Staff

Published:


c20c95d6d302ebf55f023059864d9d3c-1

சொல்லிக்கொள்ளும்படியான வேலை, கைநிறைய வருமானம் இருந்தும், சிக்கனமாய் செலவழிச்சும் சிலருக்கு வீட்டில் பணம் சேராது. அப்படி பணம் சேராமல் இருக்க, அவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளே காரணம்.. அவை என்னவென்று தெரிந்துக்கொண்டு அவற்றை செய்யாமல் இருந்தாலே வீட்டில் பணம் சேரும்.

யாருக்காவது பணம் கொடுக்கும்போதும், யாரிடமிருந்தாவது பணத்தை வாங்கும்போதும் வலக்கையால் செய்யவேண்டும். மறந்தும் இடக்கையால் கொடுக்கல், வாங்கல் செய்யாதீர்கள்.

பணம் எண்ணும்போதும், வரவு செலவு எழுதி இருக்கும் நோட்டு, பேங்க் பாஸ்புக், சொத்து தஸ்தாவேஜுகள் என எதையும் எச்சில் தொட்டு புரட்டக்கூடாது. இது தரித்தரத்தை உண்டாக்கும்.

வரவு செலவு நோட்டுகள், தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் எழுதத் துவங்கும் முன் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ  அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .( புனுகு, 2.கஸ்தூரி, 3.கோரோசனை, 4.குங்குமப்பூ, 5.அத்தர்/ சந்தனம், 6.பச்சை கற்பூரம், 7.ஜவ்வாது, 8.அரகஜா இந்த எட்டும் கலந்த கலவையே அஷ்டகந்தம்.)

பர்ஸ்,  சட்டைப்பையில் பணம் இல்லாமல் வெளியில் செல்லக்கூடாது. பணம்தான் பணத்தை ஈர்க்கும்.

வியாபார இடத்தில் பணப்பெட்டி வைத்திருக்கும் அறை  சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிற பெயிண்ட் அடிப்பது பணவரவை அதிகப்படுத்தும். கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.

3d05d4e8a2f467eaca61743ee48746f8

பணப்பெட்டியில் பணம் வைக்கும்பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீமகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

அவசியமில்லாதபோது பணத்தை கண்ட இடங்களில் போட்டு வைப்பதை தவிர்க்கவும். பீரோ, பெட்டி, பர்ஸ், எதாவது டப்பாக்களில் போட்டு வைக்க வேண்டும். செலவுக்கு பணத்தை வெளியில் வைக்கும்போது உடனே சட்டைப்பை, பர்ஸ், ஹாண்ட்பேக், அல்லது டப்பாக்களில் வைத்துவிடவேண்டும். கொஞ்சம் நேரம்பிடிக்கும் என்றால் பூஜையறையில் ஒரு தட்டில் வைப்பதை வழக்கத்தில் வைக்க வேண்டும்.

இப்படி செய்து வந்தால் பணம் சேரத்தொடங்கும்…

Leave a Comment