வழக்குகளில் இருந்து விடுவிக்கும் வழிவிடு முருகன்- பங்குனி உத்திர கோலாகலம்

By Staff

Published:

deba041abac2f7b84b114725e5c099f0

இராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது வழி விடு முருகன் கோவில்.ஒரு காலத்தில் வேல் மட்டுமே வைத்து வழிபாடு நடந்து வந்த சின்ன கோவிலாய் இது இருந்துள்ளது. அருகில் மாவட்ட கோர்ட் இருந்துள்ளது கோர்ட்டிற்கு வருபவர்கள் தங்கள் பக்கம் நியாயம் கிடைக்க வேண்டும் என்று இந்த வேல் இருக்கும் இடத்தில் வேண்டி செல்வார்கள். அப்படி கோர்ட் சென்று வருபவர்களுக்கு தகுந்த நியாயமும் கிடைக்கும்.

அப்படி நியாயம் கிடைத்த ஒருவர் கட்டிய கோவில்தான் இந்த வழிவிடு முருகன் கோவில். மூலஸ்தானத்திலேயே அண்ணன் விநாயகருடன் முருகன் காட்சி தருவது இந்த கோவிலின் சிறப்பு ஆகும்.

இங்கு பங்குனி உத்திர திருவிழாதான் மிகப்பெரிய திருவிழா. இராமநாதபுரம் நகரத்தில் நடக்கும் மிகப்பெரிய திருவிழா ஆகும். வழக்குகளில் வெற்றி பெற இந்த முருகனை வணங்குங்கள். வணங்கினால் வெற்றி பெறலாம்.

இந்த வருடத்திற்கான பங்குனி உத்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கோவில் வந்து முருகனின் திருவருளை பெற்று செல்லுங்கள்.

Leave a Comment