துலாம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

ஐப்பசி மாதம் உங்களுக்குப் பிரச்சினையில்லாத மாதமாக இருக்கும், வாழ்க்கைத் துணைக்கு இருந்த உடல் நலக் குறைவு சரியாகி ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். இதுவரை இருந்த பணக் கஷ்டம் ஓரளவு குறையும், செலவுகள் இருந்தாலும் அதனைச் சமாளிக்கும்…

Thulam

ஐப்பசி மாதம் உங்களுக்குப் பிரச்சினையில்லாத மாதமாக இருக்கும், வாழ்க்கைத் துணைக்கு இருந்த உடல் நலக் குறைவு சரியாகி ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

இதுவரை இருந்த பணக் கஷ்டம் ஓரளவு குறையும், செலவுகள் இருந்தாலும் அதனைச் சமாளிக்கும் வகையிலான பண வரவு இருக்கும். ஐப்பசி 25 க்கும் மேல் சுக்கிரன் ராசிக்கு இடம் பெயர்கிறார், தன வரவு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கும்.

ராசிக்கு 3 ஆம் இடத்தில் செவ்வாய் பார்வை உள்ளதால் உடன் பிறப்புகளுடனான அன்பு அதிகரிக்கும். 4 ஆம் இடத்தில் ராகு உள்ளார். தாயின் உடல் நலனில் அக்கறை தேவை.

பூர்விகச் சொத்துகள் ரீதியான பிரச்சினைகளை தற்போதைக்கு ஓரங்கட்டவும்; இல்லையேல் அது பிரச்சினையினைக் கொண்டுவந்து சேர்க்கும்.

ராசிக்கு 6 ஆம் இடத்தில் குரு பகவான் ஆட்சி பலத்தில் உள்ளார், உடல்நலன் சிறப்பாகவே இருக்கும். ராசிக்கு 7 ஆம் இடத்தில் கேது உள்ளார்.  கணவன்- மனைவி இடையே சிறு மனக் கசப்புகள் ஏற்படும்.

தொழில்ரீதியாக அலைச்சல் ஏற்படும், தொழில்துறையில் சிறப்பான லாபம் கிடைக்கும். கடன் வாங்கினாலும் கடனை விரைவில் அடைப்பீர்கள். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வருதல் வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன