ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே 4 கிமீ தொலைவில் உள்ளது சேதுக்கரை. மிகவும் சக்திவாய்ந்த புண்ணியஷேத்திரம் இது. இந்த சேதுக்கரையில் இருந்துதான் ராமர் சீதையை மீட்க பயணமானார் என்பது வரலாறு.
இங்கிருந்து வானரஸேனைகளின் உதவியுடன் அணை கட்டி இலங்கைக்கு செல்கிறார் ராமபிரான். அங்கு நடந்த போரில் ராவணனை வென்று ராமேஸ்வரம் திரும்புகிறார்.
ராமர் கால்பட்ட இடம் என்பதாலும், இங்கிருந்து துவக்கிய விசயம் வெற்றியடைந்ததாலும் இது புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.
முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவில்லை என்றால் இங்கு வந்து வேண்டிக்கொள்ளலாம். இங்கு ஹோமங்கள், யாகங்கள் இறந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களின் ஆத்மா சாந்தி பெற செய்யலாம்.
சிலருக்கு குழந்தையின்மை, திருமணத்தடை , துர்மரணங்கள் போன்ற பல பிரச்சினைகளுக்கு பல வருடமாக தலைமுறையாக நம் முன்னோர்களுக்கு உரிய நீத்தார் கடனை செய்யாமல் இருப்பதே ஒரு முக்கிய காரணம் ஆகும்.
அவர்களுக்கு உரிய முறையில் அவர்களின் பிரதிமை எனப்படும் அவர்களின் உருவமாக நினைத்து சில வெள்ளி உருவங்களை நினைத்து 21 தலைமுறைக்கும் செய்வதுதான் திலா ஹோமம்.
ஏன் சேதுக்கரையில் செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது இக்காணொளி.