ஜூன் 21 இன்றைய தினம் சூரிய கிரகணம் காலை 10:31 மணிக்கு தொடங்கி மதியம் 2:30 மணிக்கு முடிவடையும். கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் நண்பகல் 12:18 மணி. கிரகணம் மொத்தம் 3 மணி 33 நிமிடங்கள் நீடிக்கிறது. கிரகணத்தின்போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை, தோஷத்திற்குள்ளாகும் நட்சத்திரங்களும், அதற்கான பரிகாரங்களையும் பார்த்தோம்…
இனி கிரகணத்தால் உலகில் நடக்க இருக்கும் பொதுவான பலன்களை பார்க்கலாம்..
ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த சூரிய கிரகணம் காரணமாக கிரக நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்கள் கொரோனா தொற்றுநோயின் முடிவுக்குக் காரணமாக அமையும் என நம்பப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய இந்த சூரிய கிரகணம் காரணமாக மழை குறைவு, கோதுமை, நெல் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தி குறையக்கூடும். தானியங்களைப்போலவே, பசுவின் பால் உற்பத்தியும் குறையக்கூடும். இது தவிர, முக்கிய நாடுகளுக்கிடையே அதிகரித்த பதற்றம் மற்றும் விவாதம், விவகாரம் மேலும் பதற்றத்தைக் கொடுக்கலாம். இந்த கிரகணம் வர்த்தகர்களுக்கு நல்லது மற்றும் பணியாளர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. கல்வித்துறையில் மந்தநிலை ஏற்படும். பொதுவாக தனி நபர் மருத்துவ செலவு அதிகரிக்கும்.. திருட்டு, கொள்ளைகள் அதிகரிக்கும், வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும், பணப்புழக்கம் குறையும், என ஜோதிட வல்லுனர்கள் சொல்கின்றனர்.
பிரச்சனை கொடுத்த இறைவனே தீர்வையும் கொடுப்பது வழக்கம். அதனால், கிரகணம் நிகழ்ந்த பிறகு பக்கெட் தண்ணீரில் கல் உப்பு சேர்த்து குளித்து, வீட்டை துடைத்து சர்க்கரை பொங்கல் அல்லது அன்னத்தினை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து சாப்பிடவேண்டும். கோதுமை, முழு உளுந்தினை தானம் செய்தால் கிரகணத்தால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.