ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

By TM Desk

Published:

ஞாயிற்றுக்கிழமை பிறந்தநாள் பலன்கள்

ஞாயிற்றுக்கிழமை சூரியன் கிரகம் அதிகமாக இருக்கிறது. சூரியன் அதிபதியாக கொண்ட ராசி சிம்ம ராசியாகும். இந்த கிழமையில் பிறந்தவர்கள் செய்யும் வேலையை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேச கூடியவர்கள்.

இவர்கள் அதிகாரம் செய்ய கூடிய குணம் இயல்பாக இருப்பதால் அந்த பதவியில் நல்ல செயல்படுவார்கள். இவர்களிடம் கோபம் அதிகமாக காணப்படும். இவர்களுக்கு சிறு சிறு விஷயங்கள் கூட எரிச்சல் ஏற்படுத்தி கோபமாக நடந்து கொள்வார்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருப்பதை போல் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யவும் தயங்க மாட்டார்கள்.

ஒரு சிலர் அதிமாக பேசுவார்கள். இவர்களிடம் தைரியம், துணிச்சல் காணப்படும். இவர்களுக்கு அதிகமாக சுற்றுவது, பயணம் மேற்கொள்வது என்பது பிடித்தமான விஷயமாகும். ஞாயற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் நேர்மறை சிந்தனையுடனும், அன்பாகவும், பணிவுடனும் நடந்து கொள்வார்கள்.

இவர்கள் வெளிப்படையாக பேசுவதால் சில நேரங்களில் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். இவர்கள் சொல்வதை செய்து முடிப்பதில் வல்லவர்கள். இவர்களிடம் பொறுப்பு அல்லது வேலை கொடுத்து விட்டால் அதனை செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். எப்பொழுதும் அதே சிந்தனையில் இருப்பார்கள்.

நம்பிகை உரியவராக இருப்பீர்கள். உங்களை நம்பி பொறுப்பு அல்லது வேலை கொடுக்கலாம் ஆனால் நம்பி எந்த விஷயம் கூற முடியாது. உளறி கொட்டி தீர்த்து விடுவீர்கள். அனைத்து கற்பனை நிறைந்த வேலைகளும் ஞாயற்றுக்கிழமையில் செய்யலாம்.

ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் அமைதியாக யாரிடமும் நெருங்கி பழக மாட்டார்கள். இவர்களிடம் நண்பர் வட்டம் அவ்வளவு இருக்காது. உங்களுக்கு சந்தேகம் குணம் இருப்பதால் யாரையும் எளிதில் நம்ப மாட்டீர்கள். யாரேனும் ஏதுனும் சொல்லி விட்டால் அதனை பெரிதாக மனதளவில் எடுத்து கொள்வீர்கள். வெளிப்புறத்தில் உங்களுக்கு நேர்மறை உருவம் மற்றும் சிந்தனை இருக்கும். நீங்கள் யோசித்து செயல் படுவீர்கள்.

நீங்கள் உதவி செய்தாலும் உங்களின் கோபம் குணத்தால் மற்றவர்களுக்கு உங்களை பார்த்தால் ஒரு பயம் தோன்றும். நீங்கள் சுயமாக மற்றும் சுதந்திரமாக சிங்கம் போல் இருக்க விருப்பம் கொள்வீர்கள். யாரும் கட்டுப்படுத்த முடியாது, அவ்வாறு செய்தால் தோல்வி அவர்களுக்கு தான்.

உங்களின் விடாப்பிடி மற்றும் கோப குணத்தால் மற்றவர்களிடம் பழகுவதில் கடினமாக நினைப்பீர்கள். அரசு சார்ந்த வேலை, தலைமை தாங்கும் வேலைகள், கலை, மிலிட்டரி, போலீஸ், ஆசிரியர், கணினி துறையில் இருப்பீர்கள். உங்களுக்கு பொறுமை இருக்காது, விரைவில் எரிச்சல் ஏற்படுத்தி விடும். சில நேரங்களில் இந்த பொறுமை இல்லாததால் செய்யும் செயலை பாதியில் விட்டு விடுவீர்கள். தனிமையில் அதிகமாக இருக்க ஆசைபடுவீர்கள்.

ஞாயிற்றுக்கிழமையில் விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்த சிறந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் சந்தோசமான மற்றும் வெற்றி நாளாகவும் கருதப்படுகிறது.

Leave a Comment