கணவன் மனைவி ஒற்றுமை-ஸ்ரீரங்கம் பெருமாளை அடிக்கடி வணங்குங்கள்

நவநாகரீக காலத்தில் கணவன் மனைவி சண்டை அதனால் பிரிவு என்பது சாதாரணமாகி விட்டது. ஒரு காலத்தில் மிகப்பெரிய பிரபலங்களுக்குத்தான் விவாகரத்து என்ற செய்தியை செய்தித்தாள்களில் பார்க்க முடியும். ஆனால் இப்போது அப்படி இல்லை விவாகரத்துகள்…

srirangam ranga nathar

நவநாகரீக காலத்தில் கணவன் மனைவி சண்டை அதனால் பிரிவு என்பது சாதாரணமாகி விட்டது. ஒரு காலத்தில் மிகப்பெரிய பிரபலங்களுக்குத்தான் விவாகரத்து என்ற செய்தியை செய்தித்தாள்களில் பார்க்க முடியும். ஆனால் இப்போது அப்படி இல்லை விவாகரத்துகள் என்பது தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது.

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ ஜாதகத்தில் சுக்கிரனின் பவரும் முக்கியம். களத்திரஸ்தானத்துக்கு முக்கிய கிரகமே சுக்கிரன் தான். சுக்கிரன் இல்லற வாழ்க்கை, காமம் சார்ந்த விசயங்களுக்கு காரகன் ஆவான். பெரும்பான்மையோர்களுக்கு இல்லற வாழ்க்கையால் கணவன் மனைவி பிரச்சினை ஏற்படுகிறது.

இதை போக்கி கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்வதற்கு ஸ்ரீரங்கம் சென்று பெருமாளை அடிக்கடி வணங்கி வர வேண்டும். நீங்கள் வெளியூராக இருந்தாலும் உங்களால் முடிந்தால் உங்களின் பிரச்சினை தீரும் வரை வாரம் வாரம் வெள்ளிக்கிழமை சென்று ஸ்ரீரங்கம் பெருமாளை வணங்கலாம்.

ஸ்ரீரங்கம் பெருமாள் சுக்கிரனுக்கு அதிபதி. ஸ்ரீரங்கம் சுக்கிர ஸ்தலமாகும் இங்கு சென்று அடிக்கடி பெருமாளையும் தாயாரையும் வணங்கி வந்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும் பணரீதியான குழப்பங்கள் நீங்கி செல்வ  செழிப்பு உண்டாகும். பெருமாளின் அருளால் வாழ்வு சிறக்கும். சண்டை சச்சரவுகள் வராது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன