சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ளது கம்பர் சமாதி.இங்கு சிறு குழந்தைகளுக்கு நாக்கில் மண் தொட்டு வைப்பது வழக்கம். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதற்கேற்ப சீக்கிரம் பேச்சு வராத சிறு குழந்தைகளுக்கு கம்பன் சமாதி அடைந்த இங்கு ,மண் எடுத்து நாக்கில் வைக்கப்படுகிறது.
கம்பராமாயணம் படைத்த கம்பன் குலோத்துங்க சோழன் அரசவையில் இருந்தபோது அங்கு மன்னரின் மகளுக்கும் கம்பரின் மகனுக்கும் காதல் ஏற்பட அதனால் பிரச்சினைகள் ஏற்பட்டபோது மனம் வெறுத்து தேசாந்திரியாக வந்து சிவகங்கை நாட்டரசன் கோட்டையில் உள்ள ஆவிச்சி செட்டியார் தோட்ட மாளிகையில் தங்குகிறார்.
அங்கேயே அவர் மரணித்து விட அங்கு கம்பருக்கு ஜீவசமாதி எழுப்பபட்டு இது போல வழிபாடுகள் நடந்து வருகிறது.
இங்கு குழந்தைகளுக்கு இதுபோல செய்வது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.