கார்த்திகை நட்சத்திரத்தின் சிறப்புகள்

By Staff

Published:

43889c0767f0c41b3d5484a4da298ce3-1

காத்திகை நாளிலே குமர வடிவேலனைத் துதிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம் காத்திகை பற்றி அறிவியல் சார்ந்த சில விடயங்கள்..

Pleiades என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கார்த்திகை நக்ஷத்திரத்தைப் பற்றிய ஏராளமான அதியசங்கள் உண்டு. 250 ஒளி ஆண்டு அதாவது கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரத்தில் உள்ளது இது. ஒரு ஒளி ஆண்டு என்றால் 6 ட்ரில்லியன் மைல்கள் என்று பொருள். ஒன்றுக்கு பக்கத்தில் 12 பூஜ்யங்களைப் போட்டால் வரும் எண் ஒரு ட்ரில்லியன். இது போல 250 ஐ 6ஆல் பெருக்கினால் வருவது 1500. 1500 ட்ரில்லியன் மைல் தூரத்தில் உள்ளது கார்த்திகை. (One light-year is about 6 trillion miles (9 trillion km). That is a 6 with 12 zeros behind it!)

ஒரு வருடத்தின் 365 நாட்களில் கார்த்திகை நக்ஷத்திரம் சூரியனுடன் உதித்து சூரியனுடன் அஸ்தமனமாகும் நாட்களே மிகவும் உஷ்ணமான நாட்கள் என அறிவியல் கூறுகிறது. சதபதபிராஹ்மணம் பல நக்ஷத்திரங்களைக் கார்த்திகைக் கூட்டம் கொண்டிருப்பதால் அதற்கு பகுலா – பல நக்ஷத்திரம் கொண்டது – என்ற பெயரையும் சூட்டுகிறது. கார்த்திகை நக்ஷத்திரத்தின் அதி தேவதை அக்னி. க்ருத்திகா நக்ஷத்திரம் அக்னிர் தேவதா: என்று தைத்திரீய சம்ஹிதை நான்காம் காண்டம் கூறும். அக்னியே ஸ்வாஹா: க்ருத்தியாம்யஹ ஸ்வாஹா என தைத்தீரிய ப்ராஹ்மணம் (||| 1.4.2) கார்த்திகை நக்ஷத்திரத்தைப் புகழும். 18 புராணங்களிலேயே மிகப் பெரியதான சுமார் 81000 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்காந்த புராணம் கார்த்திகை நக்ஷத்திரத்தின் பெருமையைக் கூறுகிறது. முருகனின் ரகசியங்களை விளக்குகிறது.

Leave a Comment