ராகு- கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகின்றது. சிம்ம ராசி அன்பர்களே! ராகு பகவான் பெயர்ச்சிக்குப் பின்னர் 9 ஆம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கிறார். கண்டக சனி 7 ஆம் இடத்தில் உள்ளது.
7 ஆம் இடம் என்பது தொழில் கூட்டமைவு, 8 ஆம் இடம் என்பது திடீர் பயணம், திடீர் கஷ்டங்கள் என்று கொள்ளலாம். சிம்ம ராசி பல வகைகளிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமாக இது இருக்கும்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
தொழில் சார்ந்த முதலீடுகளில் மிகக் கவனம் தேவை; பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்வதைத் தவிர்க்கவும்; கூட்டுத் தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் தேவை.
மேலும் எடுக்கும் எந்தவொரு முடிவுகளிலும் கவனம் தேவை, ஒருமுறைக்குப் பலமுறை ஆராய்ந்து முடிவு எடுத்தல் நல்லது. குடும்ப உறுப்பினர்களிடமும், அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடமும் ஆலோசித்து முடிவு எடுத்தல் வேண்டும். 8 ஆம் இடத்து ராகு பகவான் பேராசையினைக் கொடுப்பதாய் இருக்கும்; ஆனால் எதிர்பார்ப்பு கடைசில் பொய்த்துப் போகும்.
கேது பகவான் 2 ஆம் இடத்தில் உள்ளார். குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஞானத்தினைக் கொடுப்பார். சுயநலவாதிகள் உங்கள் கண்ணுக்குத் தெரிவர்.
குடும்ப வாழ்க்கையில் கோபங்களைக் குறைத்து நிதானித்துச் செயல்படுதல் வேண்டும். கொடுக்கும் வாக்குறுதிகளில் கவனம் தேவை. சொல்லிவிட்டுச் செய்வதைக் காட்டிலும் செய்துவிட்டு சொல்லுங்கள்; ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் வாக்கினைக் கடைபிடிக்க முடியாமல் போகலாம்.
கடன் கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை; யாருக்கும் ஜாமீன் போடாதீர்கள். வாங்கிய கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்காதீர்கள். பொறுமை, சகிப்புத்தன்மை, நிதானம் போன்றவற்றினைக் கடைபிடித்தல் வேண்டும், கடினமான கால சூழலாக இது உங்களுக்கு இருக்கும்.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
இந்தக் கடினமான கால சூழலில் இருந்து மீள தர்ம காரியங்களில் ஈடுபடுங்கள். இறை பணிகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். ராகு- கேது பெயர்ச்சி பல வகைகளிலும் உங்களுக்குச் சாதகமானதாக இல்லை. பொறுமையுடன் இந்த காலகட்டத்தினைக் கடந்து வாருங்கள்.