சிம்மம் நவம்பர் மாத ராசி பலன் 2023..!

9 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார். ராகு- கேது இடப் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. சிம்ம ராசியினைப் பொறுத்தவரை நவம்பர் மாதத்தின் முதல் பாதியில் சூர்ய பகவான் 3 ஆம் வீட்டில் நீச்சம் அடைகிறார். சுக்கிரன் நீச்சம் அடைகிறார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை முதல் பாதியில் சுக்கிரனின் நீச்சம் பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாய் இருக்கும். சுக்கிரன்- கேது இணைவானது வேலை செய்யும் இடத்தில் அவப் பெயரை மேல் அதிகாரிகளிடம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சக பணியாளர்களுடன் எந்தவொரு விஷயத்தினைச் செய்யும் போதும் கூடுதல் ஜாக்கிரதையாக செயல்படவும். புதுவகையான மாற்றங்களுக்கு தற்போதைக்கு முயற்சிக்காதீர்கள்.

ராகு- கேது இடப் பெயர்ச்சி 2 மற்றும் 8 ஆம் இடத்தில் இருப்பதால், பலவகைகளிலும் சோதனைகளையே கொடுக்கின்றது. குரு பகவான் ஓரளவு மோசமான தாக்கங்களில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொண்டே வருகிறார்.

சனி பகவான் உடல் தொந்தரவுகளைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். சிறு சிறு உடல் தொந்தரவுகளை சரிவரக் கவனிக்காவிட்டால் பெரிய அளவில் உடல் தொந்தரவுகள் ஏற்படும். தாய்- தந்தை உடல் நலன் ரீதியாக மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

திருமண காரியங்களைப் பெரிதளவில் சாதகமாக எதுவும் இல்லை, எதிர்பார்த்தது போல் வரன் எதுவும் அமையாது. தற்போதைக்கு திருமண காரியத்தைத் தள்ளி வைக்கவும்.

ராகு- கேது இடப் பெயர்ச்சி, சூர்ய பகவானின் நீச்சம், சுக்கிரனின் நீச்சம், சனி பகவானின் பார்வை என அனைத்துக் கிரகங்களும் உங்களுக்குப் பெரிதளவில் சாதகமானதாக இருக்காது.

மாணவர்களைப் பொறுத்தவரை படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுதல் வேண்டும். குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன்- மனைவி இடையே மூன்றாம் நபர்களால் பெரும் பிரச்சினைகள் ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மேலும் பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வாக்குகளைக் கொடுக்கும் போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துக் கொடுத்தல் நல்லது.