சிம்மம் ஆவணி மாத ராசி பலன் 2022!

உங்கள் இராசியில் சூரியன் வருவதால் நரம்பு மற்றும் கண் சம்பந்தப்பட்ட உபத்திரங்கள் ஏற்படும், மிகவும் கவனத்துடன் இருத்தல் நல்லது. வண்டி, வாகனங்களில் பயணிக்கும்போது கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகள் சார்ந்த விஷயங்களில் இருந்த மனக்…

Simmam

உங்கள் இராசியில் சூரியன் வருவதால் நரம்பு மற்றும் கண் சம்பந்தப்பட்ட உபத்திரங்கள் ஏற்படும், மிகவும் கவனத்துடன் இருத்தல் நல்லது. வண்டி, வாகனங்களில் பயணிக்கும்போது கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகள் சார்ந்த விஷயங்களில் இருந்த மனக் குறைகள் நீங்கும்.

பழைய கடன்களில் இருந்து மீண்டு வருவீர்கள், தொழில் அமைப்பில் பல மாதங்களாக இருந்த பாதிப்புகள் நீங்கும் மாதமாக இருக்கும்.

உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் வாக்கு வாதங்கள் வேண்டாம், சக பணியாளர்களுடன் மனச் சங்கடங்கள் ஏற்படும், நிதானம் மட்டுமே பிரச்சினைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் தடுப்பதாக இருக்கும்.

சிறிய வாக்குவாதங்கள் செய்தால் கூட, பெரும் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். நண்பர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும், உணவு சார்ந்த விஷயங்களில் சிறிது கவனத்துடன் இருத்தல் நல்லது.

விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு செய்து வந்தால் அனுகூலங்கள் ஏற்படும், பெற்றோர் உடல் நலனில் மேம்பட்டுக் காணப்படுவார்கல். குழந்தைகள் கல்வியில் மேம்படுவார்கள், உடன் பிறப்புகளுடன் இருந்த பிரச்சினைகள் சரியாகும்.

சுபகாரியங்களுக்கான வேலைகளை ஆரம்பிப்பீர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன