சனிக்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

By TM Desk

Published:

சனிக்கிழமை பெயருக்கு ஏற்ற மாதிரி அதன் கிரகமும் சனி பகவான் தான். கும்பம் மற்றும் மகரம் சனி அதிகம் உள்ள ராசிகளாகும். இவர்கள் பெரும்பாலும் சோம்பறியாக இருப்பார்கள், ஆனால் வேலை அல்லது பொறுப்பு என்று வந்து விட்டால் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். சனியின் இயற்கையான குணம் சோம்பல். அது இவர்களிடம் அதிகம் காணப்படும். இவர்கள் புத்தகம் பார்த்து அதில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அப்படி செயல்படுவார்கள். அதில் கொடுக்கும் ரூல்ஸ் இவர்களை வழிநடத்தும். கடுமையாக மிலிட்டரி போன்று இருப்பார்கள். பொறுப்பான குணம் இருப்பதால் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

பல விஷயங்களை நினைத்து வருத்தப்படுவார்கள் மற்றும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருப்பார்கள். ஒரு சிலருக்கு சோகம் நிறைந்த வாழ்க்கை இருக்கும். ஆனாலும் சனிக்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல உழைக்க கூடியவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருப்பார்கள். நல்ல வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள். இவர்களை சுற்றி நண்பர்கள் கூட்டம் இருக்கும். தானாக சேர்ந்த கூட்டமாகதான் இருக்கும். இவர்களிடம் நகைச்சுவை இருக்காது எப்போதும் கடுமையான முகத்தை வைத்து இருப்பார்கள். ஆனலும் இவர்கள் ஒரு குழந்தை போன்று தான் இருப்பார்கள். வெளித்தோற்றம் அவ்வாறு இருந்தாலும் இவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு இவர்களின் இயல்பு பற்றி தெரியும்.

இவர்களில் சிலர் உடல் மெலிந்தும், ஏழ்மையிலும் இருப்பார்கள். ஒரு சிலர் மற்றவர்களிடம் நியாயமாக இருக்கமாட்டார்கள். ஒரு சிலர் நடுத்தரமாக இருந்தாலும் வாழ்க்கையில் கடுமையாக உழைத்து முன்னேற்றம் அடைவார்கள். பெரும்பாலும் இரும்பு, பழைய பாத்திரங்கள் மற்றும் பொருட்கள், கட்டிட்டம், தொழிற்சாலை போன்றவற்றில் இவர்களுக்கு வேலை அமையும். இவர்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். நிறைய ஞானிகள், அறிவியளாலர்கள், ஆராய்ச்சியாளர்கள் சனிக்கிழமையில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள நினைப்பார்கள். அதற்காக கடினமாக உழைப்பார்கள். உடுத்தும் உடையில் கவனமாக இருப்பார்கள். மற்றவர்கள் சொல்ல வந்த கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் தான் சொல்வது தான் சரி என்று அடித்து பேசும் குணம் இருக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்டு கொண்டாலும் தான் செய்வது தான் என்று இருப்பார்கள். இவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாத ஒன்று. ஒருவரிடம் நண்பராகும் முன்னே அவர்களைப் பற்றி கணித்துவிட்டு தான் நண்பராக இருப்பார்கள்.

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்று செய்யும் வேலையில் பெருமாளை நினைத்து செய்வதால் செய்யும் காரியத்தில் வெற்றி காணலாம். சனிக்கிழமையில் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பொறாமை, சந்தேகம், குறை கூறுவது, மன அழுத்தம் போன்றவை இருக்காது. செய்யும் வேலையில் பிழை இல்லாமல் செய்யக் கூடியவராக இருப்பார்கள்.

இவர்கள் சொல்லும் கருத்து மற்றவர்களுக்கு முகம் சுளிக்க வைக்கலாம். அது நேர்மறையாக இல்லாமல் நேர்மாறான கருத்தாக இருக்கும். அனைவரும் ஒரு கருத்து கூறினால் இவர்கள் மட்டும் வித்தியாசமாக கூற வேண்டும் என்று கூறி அது விவாதத்தில் முடிவடையும். இவர்கள் நம்பிக்கைக்குரியவராக இருப்பார்கள். அதனால் பலரும் இவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

இவர்கள் செய்யும் வேலையை சுத்தமாக, குறை எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். இவர்கள் கடந்த காலத்தை யோசித்து வாழ்ந்து கொண்டு இருப்பார்கள், நிகழ் காலத்தில் வாழ மாட்டர்கள். ஒரு சிலர் தங்கள் உருவத்தை மற்றும் முகத்தின் அழகை வைத்து பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அதற்காக பெரும் நேரத்தை செலவு செய்வார்கள். இவர்களிடம் அதிக நம்பிக்கை மற்றும் மன உறுதி இருக்கும்.