சென்னை: ஒருவருக்கு சனி தசை 19 வருடம் நடக்கும். சனி தசை காலத்தில் மிக வேகமான வளர்ச்சி நடக்கும், அசுவினி தொடங்கி ரேவதி வரை 27 நட்சத்திரங்களும் 9 கோள்கள் அதிபதியாக உள்ளன. ஒருவர் பூசம், ஹஸ்தம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே சனி மகாதசை நடக்கும்.
ஒருவர் பூசம், ஹஸ்தம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் போதே சனி மகாதசை நடக்கும். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னம்/ராசிக்காரர்களுக்கு சனி தசை யோகத்தை வழங்கும்.
சனி போல பணத்தை அள்ளிக்கொடுப்பவர் யாரும் இல்லை. சனி திசை காலத்தில் தொழில் தொடங்குவார்கள். சனி எங்கிருந்தால் அதிர்ஷ்டம் என்று பார்த்தால். துலாமில் சனி உச்சமடைபவர். சனி உச்சம் பெற்றவர், சனி பார்வை துலாம் ராசியில் விழுந்தால் அவர்கள் நீதி துறையில் புகழ் பெற்று விளங்குவார்கள்.
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ஆறு லக்னகாரர்களுக்கும் சனிபகவான் தனது தசாபுத்தி காலத்தில் அடிப்படையில் நன்மைகளையும் யோகங்களையும் கொடுப்பார். மேஷம் விருச்சிகம், லக்னத்திற்கு பாதகாதிபதியாக சனி வருகிறார் கடகம், சிம்மம் , தனுசு, மீனம் லக்னங்களுக்கு சனி சுமாரான பலன்களையே சனி திசை கொடுக்கும்.
அரசியலில் புகழ் பெற்று திகழவேண்டும் என்றால் அவருக்கு சனி நல்ல உதவி செய்வார். அதே நேரம் சனி நோய்கள், விபத்திற்கும் காரகர். சனி சரியில்லாமல் இருந்தால் உறவில் கூட விரிசல் ஏற்படும். தொழிலில் நஷ்டம் ஏற்படும். சனி பிறவி ஜாதகத்தில் மோசமாக இருந்தால் பாதிப்புகள் அதிகமாகும். நிறைய சோதனைகள் வந்து அவர்களை சாதனைகள் புரிய வைப்பார்.
சனி திசை நடக்கும் போது சனி இருக்கும் இடத்தை பொறுத்து சுப பலன்களோ அசுப பலன்களோ உண்டாகும். இதே போல சனி புத்தி நடக்கும் போதும் சிலருக்கு உடல்நலக்குறைவு, பொருள் நஷ்டம் ஏற்படும். சனி பெயர்ச்சியால் பாதிப்பு, சனி தசை, புத்தியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபட சனி சாந்தி ஹோமம் செய்யலாம். தோஷ நிவர்த்தி பூஜை செய்யலாம்.
சனி தசை காலத்தில் இரும்பு தானம் செய்யலாம். நல்ல தர்மசிந்தனையோடு இருங்கள் சனிபகவான் உங்களுக்கு நல்லது கொடுப்பார். புண்ணியம் பண்ணுங்க சனிபகவான் நிறைய வாரி கொடுப்பார். திருக்கொள்ளிக்காடு பொங்குசனி பகவானை வணங்க சனி தசையால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.