ரிஷபம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

குரு பார்வையில் சுக்கிரன், சூர்யன், புதன் என கோள்களின் இட அமைவு உள்ள நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதியில் துவங்கி 17 ஆம் தேதி வரையிலான காலகட்டம் சிறப்பானதாக இருக்கும். சனி பகவான்…

Rishabam

குரு பார்வையில் சுக்கிரன், சூர்யன், புதன் என கோள்களின் இட அமைவு உள்ள நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதியில் துவங்கி 17 ஆம் தேதி வரையிலான காலகட்டம் சிறப்பானதாக இருக்கும்.

சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மிதுனத்தில் வரும் செவ்வாய், கோபம் மற்றும் டென்சனை ஏற்படுத்தும். வேலைவாய்ப்பு ரீதியாக ஏற்கனவே இருந்த பளுச்சுமை ஓரளவு குறையும். பெரிய மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.

தொழில்ரீதியாக 11 ஆம் தேதி வரையிலான காலகட்டம் லாபம் தரும் காலமாக இருக்கும்.

திருமணம் சார்ந்த காரியங்களில் வரன்கள் கைகூடும் காலமாக இருக்கும். அதிலும் 17 ஆம் தேதிக்குள்ளான காலகட்டம் மனம் மகிழ்ச்சியினைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.

கணவன் – மனைவி இடையேயான உறவின் அன்பு அதிகரிக்கும், பிரிந்த காதலர்கள் ஒன்றுசேரும் காலகட்டம். 17 ஆம் தேதிக்கும் பின் கணவன் – மனைவி இடையே சண்டை சச்சரவு ஏற்படும். மாணவர்களின் கல்வி நலனில் முன்னேற்றம் இருக்கும்.

பெரிய அளவு உடல் நலக் குறைவு இருக்காது, இருப்பினும் உடல்நலனைப் பொறுத்தவரை அக்கறையுடன் இருத்தல் நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களால் மனக் கசப்புகள் ஏற்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன