ரிஷபம் நவம்பர் மாத ராசி பலன் 2023..!

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை நவம்பர் மாதத்தில் ராகு- கேது பெயர்ச்சி நிகழ்ந்துள்ளதால் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பானது இருக்கும். சனி பகவான் உங்களுக்கு ஆதாயப் பலன்களையே கொடுப்பார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இடமாற்றம், வெளிநாட்டு வேலை போன்ற வாய்ப்புகள் அமையப் பெறும்.

ராகு பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மேஷ ராசியிலும் இட அமர்வு செய்துள்ளனர். ராகு திசையும், ராகு புத்தியும், அதனுடன் உங்கள் பிறப்பு ஜாதகமும் சரியாக இருக்கும்பட்சத்தில் இந்த ராகு- கேது பெயர்ச்சியானது உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

தொழில் சார்ந்த விஷயங்கள் மிகவும் நேர்மறையானதாக இருக்கும். உங்களின் புது முயற்சிகளால் வாடிக்கையாளர்கள் கவரப்படுவர். தொழிலை முற்றிலுமாக மாற்ற நினைப்போருக்கும் இது சாதகமான காலகட்டமாக இருக்கும். தொழிலை அபிவிருத்தி செய்தல், புதுத் தொழில் துவங்குதல், கூட்டுத் தொழில் என தயங்காமல் எந்தவொரு முயற்சியினையும் செய்யலாம்.

மாணவர்களைப் பொறுத்தவரை தேர்வுகளில் மந்தநிலையிலேயே காணப்படுவர். மேலும் தெளிவான சிந்தனை இல்லாமல் கவனச் சிதறலுடன் இருப்பர். புது முடிவுகளை எடுக்கும்போது குழப்பம் நிறைந்து காணப்படுவர். நவம்பர் இரண்டாம் பாதியில் செவ்வாய் பகவான் ஆட்சியில் இருப்பார்.

திருமண வாழ்க்கை என்று பார்க்கையில் ராசி நாதன் சுக்கிரன் மற்றும் குரு பகவானின் இட அமைவு சாதகமாக இல்லை, எதிர்பார்த்தது போல் வரன் பெரிதளவில் அமையாது.

ராசிநாதன் சுக்கிரன் நீச்சம் அடைகிறார்; சுக்கிரன்- கேது இணைவு குடும்ப வாழ்க்கையில் குழப்பத்தினை ஏற்படுத்தும். பலரும் குடும்ப வாழ்க்கையினைத் துறந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்படுவர்.

கேது- சுக்கிரன் இணைவு பல நேரங்களில் உங்களுக்கு அவநம்பிக்கையினைக் கொடுக்கும். உறவுகள் மற்றும் நண்பர்கள் மீது அவநம்பிக்கை அதிகரிக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மேலும் பண வரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருக்கும்; மேலும் மனதளவில் மிகவும் இறுக்கமாக இருப்பதாக உணர்வீர்கள். இல்லத்தரசிகள் பெரிய அளவில் ஆதரவு இல்லாமல் மன உளைச்சலில் இருப்பர்.