ரிஷபம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

சனி பகவான் கும்ப ராசிக்கு இடப் பெயர்ச்சி செய்வதால் சாதகமான பலன்களை ஏற்படுத்துவார். சுக்கிரன்- சூர்யன்-புதன் என கோள்கள் இணைந்து தனுசு ராசிக்குள் நுழைகின்றனர், இதனால் ராஜ யோகம் நிறைந்த மாதமாக டிசம்பர் மாதமாக…

Rishabam

சனி பகவான் கும்ப ராசிக்கு இடப் பெயர்ச்சி செய்வதால் சாதகமான பலன்களை ஏற்படுத்துவார். சுக்கிரன்- சூர்யன்-புதன் என கோள்கள் இணைந்து தனுசு ராசிக்குள் நுழைகின்றனர், இதனால் ராஜ யோகம் நிறைந்த மாதமாக டிசம்பர் மாதமாக இருக்கும்.

சனி பகவான் 9 ஆம் இடத்தில், குரு பகவான் 11 ஆம் இடத்தில் என கோள்களின் இட அமைவு உள்ளது. வேலைவாய்ப்புரீதியாக நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சிறப்பாகச் செல்லும்.

குடும்பத்தில் நிறைவேறாத தேவைகள் பூர்த்தியாகும், வீட்டிற்குத் தேவையான பொருட்களை மாற்றவோ அல்லது புதிதாக வாங்கவோ செய்வீர்கள். சுக்கிரன் 8 ஆம் இடத்தில் இருப்பதால் வீட்டைப் புதுப்பிக்கவோ அல்லது புதிதாக வீடு கட்டும் முயற்சியிலோ களம் இறங்குவீர்கள்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை கவனமாக இருத்தல் நல்லது. திருமண காரியங்களைப் பொறுத்தவரை தற்போதைக்கு எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருத்தல் நல்லது.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை தேவையில்லாத விஷயங்களில் தலையீடு செய்தால் பிரச்சினைகள் ஏற்படும். புதன் பகவானின் இட அமைவால் மாணவர்கள் கல்விரீதியாக மேம்பட்டு இருப்பர்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன்- மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் சொல்வதை கேட்காமல் செயல்படுவதால் நிச்சயம் பிரச்சினைக்கு இட்டுச் செல்லும்.