ரிஷபம் அதிசார கும்ப சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் விரைய ராகுவால் வருமானம் அதிகரித்தாலும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. இந்த நிலை இந்த சனி பெயர்ச்சி மூலமாக கட்டுக்குள் வரும். இதனால் உங்களுடைய மாதாந்திர சேமிப்பு மற்றும் முதலீடு…

rishabam sani peyarchi

உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் விரைய ராகுவால் வருமானம் அதிகரித்தாலும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. இந்த நிலை இந்த சனி பெயர்ச்சி மூலமாக கட்டுக்குள் வரும்.

இதனால் உங்களுடைய மாதாந்திர சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களை முறையாக செய்ய ஆரம்பிக்கலாம்.

இதுவரை 11இல் லாபத்தை மட்டும் வாரி வழங்கிக் கொண்டு இருந்த குரு பகவான் 12ஆம் இடத்திற்கு வர இருக்கிறார். இதனால் சுப விரயச் செலவு ஒன்று உண்டாகும் .

இதுவரை ஒன்பதாம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார். இப்பொழுது பத்தாம் இடத்திற்கு அதிசாரமானாலும் இதே நன்மைகள் தொடரும். ஏனென்றால் உங்களுடைய ராசிக்கு தர்ம கர்ம அதிபதியாக சனி பகவான் இருக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக 20 சதவீதம் அளவு உழைத்து 80 சதவீதம் அளவுக்கு வருமானம் பெற்றுக் கொண்டு இருந்திருப்பீர்கள். இனிமேல் அதை 40 சதவீதம் அளவுக்கு உழைத்து 60 சதவீதம் அளவுக்கு வருமானம் பெறக்கூடிய சூழ்நிலை உண்டாகிவிடும்.

இந்த ஆண்டு முழுவதும் அமாவாசை அல்லது வளர்பிறை பஞ்சமி வரும் நாட்களில் உங்களுடைய குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். இந்த இரண்டு நாட்களில் மட்டுமே குலதெய்வம் வரங்களை வாரி வழங்குகிறது.

இந்த வருடம் முழுவதும் உடல் ஊனமுற்றவர் ஒருவருக்கு மட்டுமாவது உடல் குறையை குறைக்கும் கருவி வாங்கிக்கொண்டு தாருங்கள்.

சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.