ரிஷபம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

ரிஷப ராசியினைப் பொறுத்தவரை இராசிநாதன் இராசியில் இருந்து 6 ஆம் இடத்தில் உள்ளார். கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள், ஆனால் கடன் வாங்கினாலும் வீடு கட்டுதல், திருமண காரியங்கள் என சுபச் செலவுகளைச் செய்யுங்கள்.

இராசிக்கு 2 ஆம் இடத்தில் செவ்வாய் உள்ளதால், பூமி வாங்கும் முயற்சியில் களம் இறங்குவீர்கள். வண்டி, வாகனங்கள் வாங்கும் சூழ்நிலைகள் அமையப் பெறும். 3 ஆம் இடத்தில் சனி பகவான் மற்றும் குரு பகவானின் பார்வை உள்ளது.

சகோதரருக்கு உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படும், உடன் பிறப்புகளால் உதவிகள் கிடைக்கப் பெறும். உங்கள் இராசிக்கு 4 ஆம் இடத்திற்கு அதிபதியாக சூர்யன் உள்ளார், தாயின் உடல் நலனில் அக்கறை தேவை.

மாணவர்கள் கூடுதல் முயற்சியினைச் செய்து படிப்பில் சிறந்து விளங்குவர். 5 ஆம் இடத்தில் புதன் உச்சம் பெற்று இருப்பதால் பூர்விக சொத்துகள் விரைவில் கிடைக்கப் பெறும்.

குழந்தைகளின் உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருப்பர்.   6 ஆம் இடத்தில் சுக்கிரன், கேது ஆகிய கிரகங்கள் இருப்பதால் உடல் நலனில் அக்கறை தேவை.

மனைவிரீதியான சொத்துகள் கிடைக்கப் பெறும், தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான உறவு நீடிக்கும். தொழில்ரீதியாக அலைச்சல் இருந்தாலும், லாபத்தினை அடைவீர்கள். செலவினங்கள் இருந்தாலும் ஆதாயத்திலேயே அனைத்தும் முடிவடையும்.

முருகன் கோவிலுக்குச் சென்று வருதல் நல்லது.